மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் களப் பணிகளைத் தொடங்கிவிட்டன.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும்,மத்திய அமைச்சருமான அமித்ஷா பேசியதாவது: 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலை விட வரும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜக கூட்டணி சிறப்பாக செயல்படும். அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பா.ஜகவின் வெற்றிக்காக ஒவ்வொரு தொண்டனும் உழைதத்துவருகின்றனர்.
மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் ரசிகர் மன்றத்தில் யார் இணைந்துள்ளது? மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி- தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தானின் அஜ்மல் கசாப்புக்கு சிறைக்குள் பிரியாணி வாங்கிக் கொடுத்தது யார்?
மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேனனுக்கு கருணை காட்ட சொன்னது யார்? சர்ச்சைக்குரிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக்குக்கு, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை ஆதரிக்கிற ஜாகீர் நாயக்குக்கு அமைதி விருது கொடுத்தது யார்? இத்தகைய நபர்களுடன் கூட்டணி அமர்ந்திருப்பதற்காக உத்தவ் தாக்கரே வெட்கப்பட வேண்டாமா?
பொய்யான தகவல்களை பரப்பி தேர்தலில் வெல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். ஊழலைப் பற்றி எல்லாம் அவர்கள் பேசுகிறார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல்வாதியே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்தான். இதை சொல்வதில் எனக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஏன் தெரியுமா? ஏனெனில் இந்த நாட்டில் ஊழல் என்பதை நிறுவனமயமாக்கியவரே சரத் பவார்தான் என ஆவேசமாக பேசினார்.
மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், தேர்தலில் வெற்றி பெற்று, ராகுலின் ஆணவத்தை நாங்கள் அடக்குவோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து உள்ளனர். நாம் கடினமாக உழைத்து, நமக்கு நாமே கடினமான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜ., எழுச்சி பெற வேண்டும். இவ்வாறு பாஜக மூத்த தலைவரும்,மத்திய அமைச்சருமான அமித்ஷா பேசினார்.