Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மூன்று சட்டங்களில் திருத்தம்! மூன்று ஆண்டுகளில் தண்டனை!

Oredesam by Oredesam
August 12, 2023
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! மூன்று சட்டங்களில் திருத்தம்! மூன்று ஆண்டுகளில் தண்டனை!
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களை திருத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் மூன்று மசோதாக்களை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட மூன்று மசோதாக்களும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எந்த மூன்று சட்டங்களில் திருத்தம் :
ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம்,
சி.ஆர்.பி.சி. எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம்,
ஐ.இ.சி. எனப்படும் இந்திய சாட்சிகள் சட்டம்

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களின் பெயர் :
பாரதீய நியாய சன்ஹிதா எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா;
பாரதீய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனப்படும் இந்திய மக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா;
பாரதீய சாக்ஷ்யா எனப்படும் இந்திய சாட்சிகள் மசோதா

இது குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் பேசியதாவது :

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரியமாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் நீதி விரைவாக கிடைக்கும் வகையில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது . இந்த புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், குற்றவியல் நீதி அமைப்பு புத்துயிர் பெறும். வழக்குகளில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்.

இந்திய நீதித்துறை சட்ட மசோதாவில், தேச துரோக சட்டத்தை ரத்து செய்யும் விதிகள் உள்ளன. கும்பல் படுகொலைகள், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரவும் இம்மசோதா வழி செய்கிறது.இந்த மசோதாக்கள், நம் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சபையில் என்னால் உறுதிபட கூற முடியும்.

இந்தியாவை அடிமைப்படுத்தவும், தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுமே ஆங்கிலேயர்கள் குற்றவியல் தண்டனை சட்டங்களை கொண்டு வந்தனர். அதை தான் நாம் இன்று வரை பின்பற்றி வருகிறோம். ஆனால், இந்த புதிய மசோதாக்களின் நோக்கம் தண்டனை வழங்குவதல்ல; நீதி வழங்குவதையே நோக்கமாக வைத்து இயற்றப்பட்டுள்ளது.

பழைய சட்டங்களை மாற்றி, இந்த மூன்று புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, நம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

இந்திய ஜனநாயகத்தின் 70 ஆண்டு கால அனுபவத்தில், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட நம் குற்றவியல் சட்டங்களை விரிவாக மறு ஆய்வு செய்து, மக்களின் சமகாலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

  • இந்த புதிய சட்டங்களின்படி, வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். நிலைமைக்கு ஏற்ப, கால அவகாசத்தை மேலும், 90 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டிக்கலாம். போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்து, 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • திருமணம், வேலை, பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக அல்லது அடையாளத்தை மறைத்து, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும்.
  • கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு, 20 ஆண்டுகள் சிறை முதல், ஆயுள் தண்டனை வரை விதிக்க, இந்த சட்டங்கள் வழி செய்கின்றன. அதுவே, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கவும் விதிகள் உள்ளன.
  • கும்பல் படுகொலைகளுக்கு, ஏழு ஆண்டு முதல், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வரை விதிக்க வழி உள்ளது.
  • இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது. எனவே, தேச துரோக சட்டம் முற்றிலுமாக நீக்கப்படும்.
  • பயங்கரவாதம் என்பது, முதல் முறையாக சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் இணையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதியின் சொத்துக்களை முடக்க, இந்திய நீதித்துறை சட்ட மசோதா வழி செய்கிறது.
  • அரசு வழங்கும் தண்டனை தள்ளுபடியை, அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டுமே மாற்ற முடியும் என்றும், ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகளுக்குள் மட்டுமே குறைக்க முடியும் என்றும், புதிய விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
  • வழக்குகளில் தண்டனையை அதிகரிக்க, தடயவியல் அறிவியலை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனை விகிதத்தை 90 சதவீதம் ஆக்குவதே இந்த மசோதாக்களின் நோக்கம்.இந்த மூன்று புதிய மசோதாக்களை, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இரண்டு பெண்கள் ஒரு சிசுவின் உயிரை பறித்த போலி முகநூல் கணக்கு! விளையாட்டினால் விதி இழந்த 3 உயிர்கள்!

இரண்டு பெண்கள் ஒரு சிசுவின் உயிரை பறித்த போலி முகநூல் கணக்கு! விளையாட்டினால் விதி இழந்த 3 உயிர்கள்!

July 6, 2021
இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் ரூ.10 கோடியில் கட்டப்படுகிறது! ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்

இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் ரூ.10 கோடியில் கட்டப்படுகிறது! ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்

June 25, 2020
சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் !

சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் !

April 19, 2020
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

October 4, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x