அமெரிக்கா அதிரடி ! சீனாவில் செய்யப்பட்ட முதலீடுகள் திரும்பபெறப்படும் !
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா அமெரிக்காவை ஒரு கை பார்த்துவிட்டது என்று கூறலாம் கிட்டத்தட்ட அமெரிக்காவில் மட்டும் சுமார் 80ஆயிரம் உயிர்களை பழிவாங்கியுள்ளது கொரோனா. 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு என அமெரிக்காவை உலுக்கி வருகிறது கொரோனா. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரமும் சீர்குலைந்து விட்டது. இந்த கொடூர கொரோனா ஆரம்பித்த இடம் சீனாவின் ஊகான் நகரம் ஆகும்.
கொரோனா பரவலுக்குக் காரணம் சீனா தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்காகச் சீனாவிடம் இழப்பீடு பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் அமெரிக்கா செய்துள்ள முதலீடுகள் திரும்பப் பெறப்படுமா என்பது குறித்து டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ஓய்வூதிய நிதியில் இருந்து சீனாவில் முதலீடு செய்துள்ள பல நூறு கோடி டாலர்களைத் திரும்பப் பெறப்போவதாகத் தெரிவித்தார்.
மற்றொரு வினாவுக்குப் பதிலளித்த டிரம்ப், நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்கள் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.