அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் ஒரு கட்டத்தில் பைடனும் டிரம்ப் இருவரும் சம பலத்துடன் இருந்தநேரத்தில் தபால் ஓட்டுகள் முடிவுகள் தேர்தல் முடிவுகளை மாற்றியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கும், இதுவரை எந்த அதிபருக்கும் கிடைக்காத வாக்குகள் இந்த முறை டொனால்ட் ட்ரம்ப்க்கு கிடைத்தது., அதாவது 71 மில்லியன் மக்கள் வாக்களித்து இருந்தனர், அத்துடன் இந்த தேர்தலில் சுமார் 47% அளவிற்கு வாக்குகளை பெற்று இருந்தார். ஆனாலும் ஜோபைடன் எண்ணிக்கையில் முந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
டிரம்ப்பிடமிருந்து தேர்தலை திருடியும், விடியலை போல பல பொய்களை சொல்லியும் ஜனவரி இறுதியில் ஆட்சிக்கு வந்த பைடனின் சாயம் செப்டம்பருக்குள் வெளுத்துவிட்டது!அவரது அப்ரூவல் ரேட்டிங் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. அவர் தன் “வேலையை சரியாக செய்கிறார்” என 45.3% பேரும், அவர் தவறாக செய்கிறார் என 49.8% பேரும் தெரிவித்திருக்கிறார்கள்
(https://tinyurl.com/8ytw5nfe) .
இடதுசாரி லிபரல் ஆதரவாளர் என பெயர் கொண்ட பைடனின் நிலை குறுகிய காலத்தில் ஏன் இவ்வளவு மோசமானது?
1, கொரோனா விவகாரத்தை சரிவர கையாளவில்லை. மோசமான பொருளாதாரம் / வேலையின்மை. விலைவாசி ஏற்றம், சட்டவிரோத குடியேற்றம், ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் சொதப்பியது என பல குறைகளை மக்கள் அடுக்கி கொண்டே செல்கிறார்கள்.
2, இவை தவிர, செப்டம்பர் 16 சிறப்பான சம்பவம் ஒன்று நடந்தேறியது. அது, ஆஸ்திரேலியா (Au), இங்கிலாந்து (UK), அமெரிக்கா (US) கூட்டாக சேர்ந்து AUKUS என்ற புதிய அமைப்பை அறிவித்தன. இதன் விளைவாக, ஃபிரான்ஸ் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்திலுருந்து தன் தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது அதாவது, உறவை முறித்துக் கொண்டுள்ளது. இது சமீப காலத்தில் கேட்டிராத ஒன்று.
என்ன பிரச்சினை?: ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆயுத நீர்மூழ்கி தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியாவும் ஃபிரான்சும் 2016இல் கையெழுத்திட்டிருந்தன (90 பில்லியன் டாலர் மதிப்பு). இந்த AUKUS வந்ததால், அந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலியா!
கடுப்பான பிரான்ஸ், செப்டம்பர் 17 அன்று அமெரிக்க உறவை சிறப்பிக்கும் வகையில் வாஷிங்டனில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்ததை ரத்து செய்தது பிரான்ஸ். இன்று தன் தூதுவர்களை திரும்ப பெற்றுள்ளது.
“ஆங்கிலம் பேசும்” இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் பிரஞ்சு பாஷையை கழற்றி விட்டது ஆத்திரமூட்டியுள்ளது ஐரோப்பாவை. ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் வாங்குவதால் சீனாவுக்கு ஆபத்து.
AUKUS கூட்டமும் இந்திய பசிபிக் பிராந்தியத்தை கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அதில் இந்தியாவும் ஜப்பானும் இடம் பெறாதது AUKUS செய்த முட்டாள்தனம்.
3, இந்த சொதப்பல் இப்படி இருக்க… பைடனின் அடுத்த சொதப்பல் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் ‘ஐஸிஸ் பயங்கரவாதிகள்’ என நினைத்து, அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் பயணித்த காரில் டுரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது அமெரிக்கா. இது நடந்து சில வாரங்கள் ஆனாலும், அந்த குற்றத்தை இப்போது அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. பலியானவர்களில் சிறுவர் – சிறுமியரும் அடங்குவர்.
பைடனின் இது போன்ற செயல்கள் அமெரிக்க மக்களை கடுப்பாக்கி உள்ளது. மேலும் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் மீது அளவுகடந்த கோபம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் அமெரிக்காவை சீனாவிடம் அடகு வைக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக அமெரிக்க மக்கள் எண்ணுகிறார்கள். விரைவில் இது மக்கள் புரட்சியாக மாறும் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை என்கிறது கருத்து கணிப்பு.
இன்னும் மூன்றரை ஆண்டுகள் இந்த பைடன் – ஹாரிஸ் கோமாளித்தனத்தை அமெரிக்க மக்களும் உலகமும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலை! ஏற்படுமா இல்லை மக்கள் புரட்சியால் பைடன் அதிபர் பதவியில் இருந்து இறங்குவாரா என்பதினை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அடுத்த வாரம் பிரதமர் மோதி அமெரிக்கா செல்கிறார் QUAD கூட்டத்தில் பங்கெடுக்க. அதில் என்னென்ன கூத்து பண்ணப் போகிறாரோ பைடன்!