டில்லியில் நடந்த ‘டைம்ஸ் நவ்’ மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
அவர் பேசுகையில் டில்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க தலைவர்கள், ஷாஹின்பாக் எதிர்ப்பாளர்களை சுட வேண்டும் டில்லி ஓட்டுக்களை, இந்தியா – பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்டும் பேசினர்.
சில தலைவர்கள் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி எனவும் கூறினர். இதுபோன்ற கருத்துக்களை பா.ஜ.க தலைவர்கள் பிரச்சாரத்தில் கூறியிருக்கக் கூடாது. இதுவே அங்கு பா.ஜ.க வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
மேலும் டில்லி தோல்வி, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக விழுந்த ஓட்டுக்களால் அல்ல.என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். நான் இன்னும் 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க விரும்புவோர் என்னுடன் விவாதம் நடத்தி கொள்ளுங்கள்.
காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவு படுத்துகிறது. என ஆக்ரோஷமாக உரையாற்றினார்.