உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் தங்களின் ஒத்துழைப்பை தந்து வருகின்றது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டு அதிகம். அதுமட்டுமில்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மேற்கு வங்கத்தில் அதிகம். அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி தனது ஊட்டு வங்கியாக பயன்படுத்தி வருகிறார் மம்தா. இதனால் தான் குடியுரிமை சட்டத்தை தீவிரமாக எதிர்த்துவருகிறார்.
இந்த நிலையில் தான்இந்தியாவில் கொரோனா பரவியது. இது முக்கியமாக டெல்லியில் நடந்த தனியார் அமைப்பு மாநாடு அதாவது தப்லிக்க்கி ஜமாத் எனும் மத மாநாடு ஒரு காரணமாக அமைத்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து 970 பேர் மத பிரச்சாரம் கலந்து கொண்டார்கள். வந்தவர்களுக்கு கொரோன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சுமார் 8000 பேர் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட 60 சதவீத நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து கலந்து கொண்டவர்கள் இதனால் கொரோன இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பரவியது கண்டறியபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரை 21 ஆயிரம் பேர் இந்த கொரோனாவால் பதிப்பட்டுள்ளார்கள்.
அங்கு பரிசோதனைகள் முறையாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் புலம்பினார். ஊரடங்கை மதிக்காமல் குறிப்பிட்ட சமுதாயத்தினர் வெளியில் வருவதாகவும் சுதந்திரமாக உலாவுவதாகவும் மம்தா அரசு அவர்களை கண்டுகொள்வதில்லை அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை எனவும் புகார்கள் தொடர்ந்து எழுந்தது. மேலும் ஊரடங்கு தளர்த்தும் நோக்கில் மம்தா இருந்ததாக செய்திகள் வளம் வந்தான். இந்த நிலையில் தான் மத்திய அரசு களம் இறங்கியது அமித் ஷா நேரடி கண்காணிப்புக்கு வந்துள்ளது மேற்கு வங்கம். முதலில் உள்துறை அமைச்சகம் 7 மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அங்கு கொரோன பரவ அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தது. அங்கு தனியார் அமைப்பு மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் இருக்கிறார்கள் என உள்துறைக்கு தகவல் கிடைத்ததும் இத அறிவிப்பை மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. நீங்கள் முடிவு எடுக்காவிட்டால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என உள்துறை அமைச்சகம் மம்தாவிற்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்ற, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினருடன், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைக்கவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது.அதிகாரிகள் குழுவினர், வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது, சுகாதார அதிகாரிகளை சந்திப்பது போன்றவற்றிலும் உறுதுணையாக இல்லை என, மத்திய அரசு கூறியது.
இதனை தொடர்ந்து மம்தா மத்திய அரசின் வழிக்கு வந்துள்ளார். மேற்கு வங்க தலைமை செயலர், ராஜீவா சின்ஹா, மத்திய உள்துறைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்
இதையடுத்து, மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லாவுக்கு, மேற்கு வங்க தலைமை செயலர், ராஜீவா சின்ஹா, எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:மத்திய அரசின் குழுவினருக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பது உண்மை அல்ல. ஒரு குழுவினருடன், இருமுறை ஆலோசனை கூட்டங்களை நடத்திஉள்ளேன். மற்றொரு குழுவுடன் தொடர்பில் உள்ளேன்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், மாநிலத்தில் முறையாக செயல்படுத்தப்படுகின்றன. மத்திய குழுவினர், எங்களுடன் கலந்தாலோசிக்காமலும், முன்னறிவிப்பு இன்றியும் வந்துள்ளனர். மேலும், எங்களிடம் இருந்து எந்த உதவியையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
கோல்கட்டாவில் இருந்த அபூர்வா சந்திரா தலைமையிலான குழுவினர், ஏப்., 20ல், என் அலுவலகம் வந்து, ஊரடங்கு மற்றும் வைரஸ் பரவல் தடுப்பில், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசினர். சிலிகுரியில் இருந்த குழுவின் தலைவர் வினீத் ஜோஷியிடம், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து உள்ளேன்.
ஊரடங்கு குறித்து மதிப்பீடு செய்ய, கோல்கட்டாவின் பல பகுதிகளுக்கு அவர்கள் சென்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான, மாநில அரசின் நடடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் பிரச்னையில், இனி மத்திய அரசின் பேச்சை கேட்கும் மம்தா அரசு.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















