அமித்ஷாவின் மாஸ்டர் பிளானால் தெலுங்கானாவில் அடுத்த வருடம் பாஜக ஆட்சி நிச்சயம்.

என்னடா ஒரு கார்ப்பரேஷன் தேர்தலை இப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதி
கொண்டு இருக்கிறானே இவனுக்கு வேறு வேலையில்லையா? என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

இந்த ஹைதரபாத் கார்ப்பரேஷன் தேர்த லுக்கு பீகார் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்த பூபேந்திர யாதவை பொறுப்பாளராக நியமித்து பிஜேபியின் நட்சத்திர பிரச்சாரர்களை பல மாநிலங்களில் இருந்து வர வழைத்து களத்தில் இறக்கி பிஜேபி வேலை செய்கிறதே எதற்காக?

இந்த ஹைதரபாத் கார்ப்பரேஷனை பிஜேபி கைப்பற்றி விட்டால் .

அடுத்த சில மாதங்களில் தெலுங்கானாவில் பிஜேபி
ஆட்சிக்கு வாய்ப்புகள் அதிகமாகி விடும் அதனால் தான் எப்படியும் ஹைதரபாத் கார்பரேசனை கைப்பற்ற தீயாக வேலை செய்து வருகிறது.

தெலுங்கானாவில் இருந்து வரும் செய்திகள் ஹைதரபாத் கார்பரேசனை பிஜேபி கைப்பற்றி விடும் என்றே கூறுகின்றன.

லேட்டஸ்ட் கணிப்பு ஒன்று பிஜேபி
க்கு 90-96 வார்டுகளில் வெற்றி கிடைக்கு ம் என்கிறது.

அசாதுதீன் உவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு 30-35 வார்டுகள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 24-29 வார்டுகளில்
வெற்றி யும் காங்கிரஸ் கட்சிக்கு 04-06 வார்டுகளிலும் வெற்றி கிடைக்கும் என்கிறது.

பிஜேபிக்கு இந்த அளவிற்கு அதாவது 90-96 வார்டுகளில் வெற்றி சாத்தியமா
என்று தெரியவில்லை.

அதிகபட்சமாக 70 வார்டுகளில் வெற்றி கிடைக்கலாம் ஒரு வேளை உவைசியின் மஜ்லிஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில்
பிஜேபிக்கு வெற்றி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மஜ்லி ஸ் கட்சி டிஆர்எஸ் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் முஸ்லிம் வாக்குகளை பெற வேண்டும் என்று முஸ்லிம் வேட்பாளர்
களை தான் நிறுத்தி இருப்பார்கள். ஆனால் பிஜேபி மட்டும் இந்து வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும்.

இந்த நிலையில் முஸ்லிம் வாக்காளர்கள் இந்துக்களை விட அதிகமாக இருந்தாலு ம் முஸ்லிம் ஓட்டுக்கள் 3 ஆக பிரிவதால் பிஜேபியின் இந்து வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கிறது.

ஒரு வேளை ஹைதரபாத் கார்ப்பரேஷன் தேர்தலில் இது நிகழ்ந்து விட்டால் அப்புறம் எண்ணி ஆறே மாதத்தில் தெலுங்கானாவில் பிஜேபி ஆட்சியில் இருக்கும் எழுதி வைத்து கொள்ளுங்கள்

எப்படி ஆந்திராவில் என்டி ராமராவ்க்கு அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு சங்கு ஊதினாரோ அதே மாதிரி சந்திரசேகர ராவ்க்கு இப்பொழுது தெலுங்கா னா நிதி அமைச்சராக இருக்கும் ஹரிஷ் ராவ் தான் சங்கு ஊத இருக்கிறார்.

ஹைதரபாத் கார்ப்பரேஷனை பிஜேபி கைப்பற்றி விட்டால் அதற்கு பிறகு தெ லுங்கானா னா ராஷ்டிரிய சமிதியில் இருந்து வெளியேறி பிஜேபியில் இணையும் விஐபிக்கள் நியூஸ் தான் தினமும் வந்து கொண்டே இருக்கும்.

ஆறே மாதம் தான் சந்திரசேகர ராவ் ஆட்சி கவிழ்ந்து விடும்.அதற்கு பிறகு தேர்தல் மூலமாக பிஜேபி ஆட்சியா?

இல்லை உடைந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏக்கள் துணையுடன் பிஜேபி ஆ ட்சியா என்பதை அமித்ஷா தான் முடிவு செய்வார்.

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அழகிரி.

Exit mobile version