பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் – முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தநிலையில்.வரும் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி உறுதி.
கடந்த 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ராகுலை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று கூறிய கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் வால் போஸ்டரில் கூட சோனியா ராகுலின் படங்களை கூட போடாமல் பிரச்சாரம் செய்து காங்கிரஸை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தினார்.
காங்கிரஸ் 4 வது இடத்திற்கு போய்விடும் வாய்ப்புகள் இருக்கிறது இதனால் தேர்த லுக்கு பிறகு பஞ்சாபில் பிஜேபியின் ஆதிக்கம் கொண்ட ஆட்சி அமைய முடியும்.
பஞ்சாபில் காங்கிரஸின் அந்திம பக்கங்கள் எழுதபட்டுகொண்டிருக்கின்றது, இத்தோடு அங்கு இனி அக்கட்சி அழியும்ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் ஆண்ட அக்கட்சி மிகபெரிய அதிருப்தியில் பல மாநிலங்களை இழந்தது, இன்று ஒருகையில் அடங்கிவிடும் அளவு விரல் விட்டு என்ணும் அளவு வெகு சில மாநிலங்களில் மட்டும் அக்கட்சி உண்டுபஞ்சாபும் அதில் ஒன்று அதுவும் போயிற்றுகாங்கிரசுக்கான சிக்கல் 1950களிலே தொடங்கிற்று, அப்பொழுதே நேரு தலமை மேல் அதிருப்திகள் இருந்தன, இவர்கள் வலுவானவர்கள் அல்ல, உறுதியான முடிவுகளை எடுக்க தெரியா குழப்பவாதிகள் எனும் குற்றசாட்டு இருந்ததுஇந்தியாவுக்கு வந்த சீன பிரதிநிதி சூ என் லாய் நேருவின் அறையில் இருந்த ஆங்கில சீமான்கள் படத்தை பார்த்து “இன்னும் நீங்கள் பிரிட்டன் அடிமையா?”
என கேட்ட காலமும் உண்டுகாங்கிரஸ்மேல் அதிருப்தி வரும்பொழுதெல்லாம் “நான் கட்சியினை விட்டே சென்றுவிடுவேன்” என மிரட்டினார் நேரு, “அய்யோ நீர் இல்லாமல் எப்படி” என கட்சி காலில் விழுந்ததுஇதே பாணியினைத்தான் இந்திரா, ராஜிவ் , சோனியா என எல்லோரும் சொல்லி மிரட்டினார்கள். இந்த மிரட்டலில்தான் நேரு குடும்பத்தை விட்டால் காங்கிரஸில் யாருமில்லை என அக்கட்சி அவர்கள் அடிமையாகவே மாறிற்றுஇப்படியெல்லாம் நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா என எல்லோரும் “கட்சியினை விட்டு சென்றுவிடுவேன்” என மிரட்டிய மிரட்டலை ராகுலும் சொல்வார்.
அப்பொழுது இருகரம் கூப்பி “இதைத்தான் எதிர்பார்த்தோம் மகராசா, தயவு செய்து சென்றுவிடுங்கள்” என சொல்ல அக்கட்சியும் தயாராக இருக்கின்றதுஆனால் ராகுல் அந்த வார்த்தையினை மட்டும் சொல்லவில்லை, சொன்னால் மறுகணம் பல்லக்கில் வைத்து தன்னை வீட்டுக்கு அனுப்பி வீட்டு காவலில் வைத்துவிடுவார்கள் என்பது அவருக்கு தெரியும்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.நேற்று அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பின்னர், அமரீந்தர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. முதல்-மந்திரியுடன் காபி சாப்பிட்டேன். கடவுள் அருளால், பஞ்சாபில்பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம். எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விவசாயிகள் போராட்டத்தில் எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது. அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.