“நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு மனித உரிமையை உபயோகிக்காதே” என்று இந்தியா விரோதி, இந்து விரோதி ஆம்னெஸ்டி பற்றி உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது 2018இல் ஆம்னெஸ்டி அலுவலகங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது பற்றிய பதிவு கமெண்டில்.
2010 முதல் (யுபிஏ காலம் முதல்) ஆம்னெஸ்டிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெற தடை இருந்தது. அதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பணம் பெற முடியாத காரணத்தால், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியது ஆம்னெஸ்டி (என்.ஜி.ஓ கம்பெனி ஆரம்பிப்பது சட்ட விரோதம்).
அதோடு, அந்த நிறுவனத்துக்கு, ஆம்னெஸ்டியின் தலைமை அலுவலகமான இங்கிலாந்திலிருந்து ‘வெளிநாட்டு முதலீடு’ என்ற பெயரில் கோடிகளை பெற்றது ஆம்னெஸ்டி இண்டியா.
அதை வெவ்வேறு (தேசவிரோத) செயல்களுக்கு பயன்படுத்தியது ஆம்னெஸ்டி.
2018 ரெய்டுக்கு பிறகு – செப்டம்பர் 10இல் தான் – ஆம்னெஸ்டி கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்.
கணக்குகளை முடக்கியதற்கும், சமீபத்திய சட்ட திருத்தங்களுக்கும் சம்பந்தமில்லை.
2018 முதல் பல விதங்களில் மோதிப்பார்த்த ஆம்னெஸ்டி, முடிவில் அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதும், “சீச்சீ இந்தப்பழம் புளிக்கும். நான் என் அலுவலகத்தை மூடுகிறேன். நூற்றுக்கணக்கான என் பணியளர்களை வீட்டுக்கு அனுப்புகிறேன்” என்று டுமீல் விடுகிறது.
டூ லேட் பாஸ்! 2018 ரெய்டுகளையடுத்து ‘பண மோசடி’ உள்ளிட்ட பல வழக்குகளை தொடுத்துள்ளது மத்திய அரசு. ஹிந்து விரோதி ஆகார் அகமது பட்டேல் உள்ளிட்ட ஆம்னெஸ்டி நிர்வாகிகள் சிறை செல்வது உறுதி.
இனி தான் ஆம்னெஸ்டிக்கு ஆப்பே வருகிறது!
குறிப்பு: ஆம்னெஸ்டி இண்டியா என்பது ஆம்னெஸ்டி இங்கிலாந்தின் கிளை. ஆம்னெஸ்டி இங்கிலாந்து என்பது ராணியின் ஒற்றர் அமைப்பு..
வெவ்வேறு நாடுகளில் உளவு பார்க்க, ‘மனித உரிமை’, ‘மனித நேயம்’ என்ற பெயரில் ஆம்னெஸ்டி கிளைகளை திறந்து, அந்த நாடுகளில் அமைதியின்மையை உண்டாக்குவதே ஆம்னெஸ்டி வேலை.
2018 பதிவு
நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு மனித உரிமைகள் ஒரு காரணமாக இருக்க முடியாது
உள்துறை அமைச்சகம்.
அம்னேஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த நிலையும், அதன் அறிக்கைகளும் துரதிஷ்டவசமானது, மிகைப்படுத்தப்பட்டது மற்றும் உண்மைக்கு புறம்பானது.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இருபது வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறை தான் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அனுமதி பெற்றது.
அப்போதிலிருந்து அம்னேஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் அதைத் தொடர்ந்து வந்த அரசுகளால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டது.
ஏனென்றால் அவ்வாறு ஒப்புதல் அளிக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் நேரடி வெளிநாட்டு முதலீடு என்னும் போர்வையில் இந்தியாவில் பதிவு செய்த நான்கு நிறுவனங்களுக்கு அம்னேஸ்டி யுகே அதிக அளவில் பணம் அனுப்பியது.
இத்தகைய சட்ட விரோத செயல்பாடுகளின் காரணமாக முந்தைய அரசும் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டிலிருந்து பணம் பெற அனுமதி மறுத்தது.
மனிதநேய சேவைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் சட்டத்தை மீறிய செயல்களை பற்றிய கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான்.