ஒலிம்பிக்கிற்கு இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்வார்கள். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும்.
பங்கேற்பு அடிப்படையில் பல்வேறு குறிப்பிடத்தக்க முதல்முறை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவின் வாள்வீச்சு வீராங்கனை (திருமிகு பவானி தேவி) ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஒலிம்பிக் தொடரில் பாய்மரப் படகு போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை திருமிகு நேத்ரா குமணன் பெற்றுள்ளார். திரு சாஜன் பிரகாஷ் மற்றும் திரு ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் நீச்சல் தரநிலையின் ஏ பிரிவில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள முதல் இந்திய நீச்சல் வீரர்கள் ஆவர்.
இந்தியா சார்பில் பங்கேற்கும் தடகள அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள். இதுவரை இல்லாத சாதனை இது. ஒலிம்பிக்கில் முதல்முறையாக நடைபெற இருக்கும் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று பெண்களும் டோக்கியோ செல்ல இருக்கிறார்கள்.திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி, திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா, மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தப் போகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கும் ரேவதி தடைகளைக் கடந்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு இந்தியத் தடகள வீரர்களின் வாழ்க்கை உதாரணமாகத் திகழ்வதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரையை சேர்ந்த வீராங்கனை ரேவதி, பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், சிறு வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்த ரேவதி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
ANURAAG TAGORE
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















