தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல மாவட்டங்களில் அடிக்கடி மின் தடைஏற்பட்டது. கடந்த ஆண்டு முதல் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் ஆழ்ந்தனர். மின்வெட்டு குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மரங்கள் வளர்ந்து அதன்மூலம் கம்பியில் அணில்கள் ஓடுகின்றன. இதனால் இரண்டு கம்பிகள் ஒன்றாகி மின்சாரம் தடைபடுகிறது,” என்றார்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, விடியும் வரை மின்வெட்டு ஏற்படுத்தி ஏழை எளிய மக்களை இருளில் மூழ்க வைத்திருப்பதுதான்,விடியல் ஆட்சியா? என்ற கேள்வி மக்கள் மனிதில் மேலோங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தொடரும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டால் மக்கள் வாழ்வாதாரத்தினை இழந்து வருகிறார்கள். கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்க முன்கூட்டியே எவ்வித நடவடிக்கையும் விடியல் அரசு எடுக்கவில்லை இதுவே தமிழகத்தில் மின்தடைக்கு முக்கியக் காரணமாகும்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டு நிலவியது போல், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கும் எனபாஜக அதிமுக போன்ற கட்சிகள் கூறினார்கள். அதனை மெய்ப்பிக்கும் விதமாகத் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாராம் வாங்கி அதில் ஊழல் செய்ய காத்திருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். அதன்படியே செயற்கையான முறையில் மின்வெட்டை ஏற்படுத்தி ஊழல் செய்ய தயாராகிவிட்டது திமுக அரசு.
மேலும் மின்வெட்டு என்றால் அணில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது, இதற்கம் அணில் தான் காரணம் என சமுகவலைத்தளங்களில் அணில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. இதில் உச்சகட்டமாக ஒரு சிறுமி அணிலை கையில் வைத்து கொண்டு அணிலுக்கு அறிவுரை கூறும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
https://youtube.com/shorts/rmVby-kHoRE?feature=share