உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து வீடு திரும்பியபோது மாயமானார். இந்நிலையில் ஒரு கும்பல் சடலத்தை சாக்கடையில் போட்டதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அந்த சாக்கடையை கிளறிய போது உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா சடலம் எடுக்கப்பட்டது. அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது உடல் முழுவதும் காயங்கள் இருந்தைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம் அன்கிட் சர்மாவை வன்முறைக் கும்பல் நீண்ட நேரம் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி சந்த்பாக் பகுதியைச் சேர்ந்த அன்கிட் சர்மா,
2017 ஆம் ஆண்டில் இருந்து உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் அங்கித் சர்மா. ஆம் ஆத்மீ கவுன்சிலர் தாஹிர் உசேன் இவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அதற்கு இந்த டெல்லி வன்முறை சம்பவத்தை பயன்படுத்தி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அன்கிட் சர்மா, டெல்லி நிலைமையை அறிந்துகொள்வதற்காக மீண்டும் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொன்று உடலை கால்வாயில் போட்டுள்ளனர். மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.