தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதலமைச்சருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் வாக்குறுதி.
ஆனால், முதலமைச்சருக்கு, தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? இதே மதுரையில், வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக சொல்லி, ஆண்டுகள் நான்கு ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. முதல் செங்கலை நாங்கள் தருகிறோம்.எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதலமைச்சருக்குத் திராணி இருக்கிறதா?
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















