பெரியாறு, அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. முல்லை பெரியாறு அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் முல்லை பெரியாறு திறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழக அரசு அதிகாரிகள் இல்லாமல் அணை திறந்துவிடப்பட்டுளது. மேலும் 138,5அடி வரை தண்ணீர் சேமிக்கலாம் என்ற நிலையில் 136 அடி நீர் இருக்கும் போதே தண்ணீர் திறந்துவிட்டது தமிழக அரசினை கேரளா மதிக்கவில்லை. தமிழக அதிகாரிகளோ அமைச்சர்களோ இல்லாமல் கேரளாவின் தன்னிச்சையான முடிவு தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையி; நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும்கூட்டணி கம்யூனிஸ்ட் அரசும், கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக இருந்து வருவதாக சாடினார்.மேலும் தமிழக அரசின் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்துள்ளது விடியல் அரசு.
முல்லைப் பெரியாற்றில் 138.5 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் 136 அடி இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுவாக முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் போது தேனி மாவட்ட ஆட்சியரும் தமிழக அமைச்சரும் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அது ஏன் என தெரியவில்லை அதற்கான காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு துணை பிரதமராக வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அதற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை என்பதால் கேரளத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துள்ளாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.தி.மு.கவிற்கு கேரள அரசிற்கும் எதாவது கள்ள உறவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையிலிருந்து 136 அடி நீர் இருக்கும் போதே அவசர அவசரமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனைக் கண்டித்து நவம்பர் 8 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம்.
இன்று அமைச்சர் துரைமுருகன் அந்த அணையை பார்வையிட சென்றுள்ளார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை இவ்வாறு அவர் கூறினார். மேலும் விடியல் அரசிற்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.