தமிழக பாஜகவில் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா கூட்டணி கவனித்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக சிலமாதங்களுக்கு முன் தமிழக பாஜக மாநிலத்தலைவராக முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலையை நியமித்தனர்.அதன்பின்பு தமிழக பாஜக வளர்ச்சியில் வேகம் எடுத்துள்ளது.
அதன்தொடர்ச்சியாக இப்போது தமிழக வடக்கு, மேற்கு மாவட்ட இளைஞர்கள், பா.ஜ.,வில் இணைவதை தடுக்க வேண்டும் என, பா.ம.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டளையிட்டு உள்ளார் என தகவல் வருகின்றது.
இந்த தகவல் குறித்து பார்போம் 2024 லோக்சபா தேர்தலில் குறைந்தது ஐந்து எம்.பி.,க்களை பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று விட வேண்டும் என்ற இலக்குடன், பா.ம.க., தன் பணிகளை துவங்கியுள்ளது.
இதற்காக, ‘பா.ம.க., 2.0’ என்ற செயல்திட்டத்தை முன்வைத்து, கட்சி தலைவராக அன்புமணி பொறுப்பேற்றுள்ளார். வரும், 2024 தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், ராமதாஸ் மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க.,வை பொறுத்தவரை, களத்தில் பா.ஜ.,தான் எதிரி. பா.ம.க.,வில் இருந்தோ, வன்னியர் சங்கத்தில் இருந்தோ, வேறு கட்சிகளுக்கு சென்றால்கூட, ஒருநாள் பா.ம.க.,வை நோக்கி வருவர் என நம்பலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ., என்பது ஒருவழிப்பாதை; சென்றால் இளைஞர்கள் திரும்ப மாட்டார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகளும் இளைஞர்களை ஈர்த்து வருகிறது.
வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,வில் சேருவதை தடுக்க, பா.ம.க., நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் செயல் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கண்டிப்புடன் ராமதாஸ் பேசியதாக, பா.ம.க.,வினர் கூறுகின்றனர்.
நன்றி தினமலர்.