தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போதைய மாநில துணைத் தலைவருமான அண்ணாமலையை அக்கட்சி அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமையன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் வீடுவீடாக சென்று நாம் என்ன செய்து பாஜகவை வளர்க்க போகிறோம் என்பது குறித்து வியூகத்தை வகுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சீனியர்கள் கட்சியில் காத்திருப்பு பட்டியலில் இருந்த நிலையில் ஒரு இளைஞரை தலைவராக நியமித்து பாஜக தலைமை கட்சியின் வளர்ச்சி பணிக்கு வேகத்தை உண்டாக்க அண்ணாமலையை தேர்வு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது என் அறையில் தலைவராகப் பொறுப்பு ஏற்றதும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
அதில் நமது தேசியத் தலைவர் ஜேபி நட்டா எனக்கு வழங்கியிருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பை எனக்கு பெருமையும்,பேரன்பு கொள்ள செய்கிறது நம் கட்சி பல சாதனைகளை பல மூத்த தலைவர்களின் உயிர்களாலும் பல தன்னலமற்ற தலைவர்களின் யாகங்களும் வழிகாட்டி நடத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்கள் அறிவுரைகளை பெற்று வழிகாட்டுதலுடன் ஓரணியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசியத் தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம் எனவும் அழகான நமது தமிழ்நாடு மாநிலமானது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தமிழ் மற்றும் நமது தமிழ்ப் பண்பாடு மீதும் அவர் கொண்டுள்ள பெருமையை அனைவருக்கும் தெரியும் நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும் உயிரான தேசப்பற்றையும் மட்டும் தமிழ் மக்கள் மீது பாரதப்பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்தும் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று இவ்வாறு பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் ஒவ்வொரு பாஜக தலைவரும் பொறுப்பை ஏற்கும்போது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று கூறுவது வழக்கம் ஆனால் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தனது அறிக்கையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீது வைத்துள்ளார். பற்றியும் மக்கள் மீது வைத்துள்ள அன்பையும் எடுத்துச் செல்வோம் என்று கூறியிருப்பது வித்தியாசமாக உள்ளது.