தி.மு.க என்றாலே பொய் புரட்டு என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு காரணம் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்பதினை மக்கள் புரிந்துகொண்டுவிட்டாட்கள்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஒரு உண்மைக்கு புறம்பான விஷயத்தினை சொல்லி மாட்டி கொண்டார். தமிழகத்தில் தான் முதன்முதலாக விவசாயத்திற்கு என, தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று கிராம சபை கூட்டத்தில் பேசினார். முதல்வர் பொய் சொல்கிறார் அதை கூறியதை மறுக்கிறேன்’ என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:
கிராம சபை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘இந்தியாவில் தமிழகம் தான் முதன்முதலாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை கொடுத்தது’ எனக் கூறியுள்ளார். இது, முற்றிலும் தவறான தகவல்.கர்நாடகாவில் 2011 – 12ல் முதல் விவசாய பட்ஜெட் போடப்பட்டது. இரண்டாவதாக ஆந்திராவில் 2013 – 14ல் தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டது.
எனவே, தமிழகம் மூன்றாவது மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை உருவாக்கியதற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராட்டுகிறேன்வ வரவேற்கிறேன். முதன்முதலாக தனி பட்ஜெட் என்பதை மறுக்கிறேன்.
தனி பட்ஜெட் போட்டது, முதல்வருக்கு பெருமை. மற்ற மாநில விவசாயிகள் பயன்பெறும், மத்திய அரசின் விவசாய சட்டத்தை மறுத்து தீர்மானம் போட்டது முதல்வருக்கு பெருமையோ பெருமை. ஆனால், பொறுமையாக நல்லது நடக்கும் எனக் காத்திருக்கும் விவசாய சொந்தங்கள் வாழ்விலோ வெறுமை, வறுமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.