கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்து. பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினர்.
இவர் பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல்துறை ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கர்நாடகாவில் சிங்கம் என அழைப்பார்கள். பல்வேறு வழக்குகளை திறமையான கையாண்டும், ரவுடிகளை அடக்கி ஒடுக்கியும் திறமையான பணியாற்றியதால், அவரை கர்நாடக சிங்கம் என்றும் அன்போடு மக்கள் அழைக்கிறார்கள்.. மேலும் இவர் மீது இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பற்று வைத்துள்ளார்கள்.
யார் இந்த அண்ணாமலை ஐபிஎஸ் தமிழகத்தில் திருச்சி அருகே உள்ள கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை குப்புசாமி. அண்ணாமலை மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். பின்னர் எம்.பி.ஏ படித்தார். காவல்துறை மீது உள்ள மோகத்தால், ஐபிஎஸ் படித்து தேர்வாகி காவல்துறை பணியாற்றி வந்தவர்.
மேலும் பா.ஜ.கவின் இளைஞரணி ஏற்கனேவே படு வேகத்தில் சென்றுகொண்டுள்ளது. கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளை குண்டரில் போட வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றது. மேலும் கலைஞர் வளர்த்த தமிழ் மொழி குறித்து வீடியோக்கள் வெளியிட்டு ஒருபுறம் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளது. வீரப்பன் மகள் வித்யா அவர்கள் மாநில இளைஞரணி துணை தலைவராக உள்ளார். இது வட மாவட்டங்களில் பாஜக கால் பாதிக்க ஒரு படிக்கட்டாக அமைந்துள்ளது. பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் அவர்கள் மிக சுறுசுறுப்பாக உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் அமைப்பினை வலுப்படுத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் ஆரவாரம் தான் மிகுந்த உற்ச்சாகம் புது உத்வேகம் என பாஜக செய்லபட்டுவருகிறது இந்த நிலையில் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை வருகை பாஜகவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதனிடையே தி.மு.கவிற்கு கொளத்தூர் தொகுதியில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, பா.ஜ.க வேட்பாளராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ.க மேலிடம் ஆலோசித்துள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., – காங்., கூட்டணியை வீழ்த்துவதற்கு, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு போட்டியாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
ஸ்டாலினுக்கு எதிராக, இளைஞர் சக்தியை திரட்டும் வகையில், ‘நீட்’ தேர்வு, புதிய கல்வி கொள்கை, ஹிந்தி விவகாரத்தில், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, அண்ணாமலை அம்பலப்படுத்துவார். மேலும், தி.மு.க.,வில், வாரிசு அரசியலை, ஸ்டாலின் ஊக்குவிப்பதை எதிர்த்தும், அண்ணாமலை பிரசாரம் செய்யும்பட்சத்தில், அது, தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என, பா.ஜ.க தரப்பில் நம்பப்படுகிறது. இது திமுகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை ஸ்டாலின் தோற்றால் கட்சியின் அடிமட்ட தொண்டனும் திமுகவில் இருக்கமாட்டார் என்பதே உண்மை. தற்போது பாஜக வளர்ச்சி பாதையில் தான் சென்று கொண்டுள்ளது. முக்கியமாக இளைஞரணி வேற லெவலில் வேலை செய்து வருகிறது. நீட்டிற்கு ாலும் கட்சி எதிர் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நீட் எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தி தந்து பரபரப்பினை ஏற்படுத்தியது. இதுவே பாஜகவின் ஒரு சாதனை. ாலும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் ஒரு நல்ல திட்டத்தை மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் கருத்துக்களை கேட்டு அதற்கு தீர்வு காண முற்சிப்பது ஒரு நல்ல கண்ணோட்டம்!
மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் ஹிந்தி நீட் ஆகியவற்றிற்கு ஆதரவாக உள்ளார்கள் என்பதை இச்சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. பார்க்கலாம் திமுகவை வீழ்த்துமா புதிய சகாப்தம் பா.ஜ.க படைக்குமா என்று