வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் யார் வேட்பாளர்கள் என்ற செய்திகள் தான் தற்போது தமிழகத்தை சுற்றி வருகிறது. திமுக கூட்டணி இறுதியாகி தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக மட்டுமே தயாராக இருக்கிறது. அதிமுகவுடன் பேசுவதற்கு ஆட்கள் தான் இல்லை. தமிழக பாஜகவும் கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. தேமுதிக மற்றும் பாமக வும் பா.ஜ.க பக்கம் வரக்கூடும். என எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் பிரேமலதா பாஜவுடனும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஓபிஎஸ் அணி அமுமுக அணிகளும் பா.ஜ.க பக்கம் சென்றுள்ளது.
ஏற்கனவே தாமாக, சமக,ஐஜேகே, ஜான்பாண்டியன் கட்சி, எசிஎஸ் சண்முகம் கட்சி.என பல கட்சிகள் இணைந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகுதிகளில் தனெக்கென்று ஓட்டு வங்கியை வைத்துள்ளார்கள். வேலூர், தஞ்சை, பெரம்பலூர், விருதுநகர்,தென்காசி, தேனி,சிவகங்கை, போன்ற தொகுதிகளில் வாக்குவங்கிகள் வைத்துள்ளன. மேலும் பாஜக அதிகமாக வாக்குகளை வைத்திருக்கும் வைத்திருக்கும் கோவை,பொள்ளாச்சி நீலகிரி,தென்சென்னை, இராமந்தபுரம்,நெல்லை போன்ற லோக்சபா தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்போது பிரதமர் மோடியின்மக்கள் திட்டங்களும் மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் பாஜகவிற்கான ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாமகவும் தேமுதிகவும் பாஜக கூட்டணிக்கு வரும்பட்சத்தில் வடதமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பலம்பெறும். விழுப்புரம், தர்மபுரி,கள்ளக்குறிச்சி சிதம்பரம் திருவள்ளூர் என பல தொகுதிகளை கைப்பற்றும். மேலும் டி.டி.வி தினகரன், பன்னீர்செல்வம் ஜான்பாண்டியன்,சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார், acs சண்முகம்,ijk பாரிவேந்தர் பாமக வந்தால் அன்புமணி ராமதாஸ்,தேமுதிக சுதீஷ் அல்லது விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களம் காணுவதால் ஸ்டார் தொகுதிகளாக மாறும். வாக்குவங்கியும் உயர வாய்ப்புள்ளது. மேலும் தாமரை சின்னத்தில் தான் அனைத்து கட்சிகளும் போட்டியிடவேண்டும் என பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.இரு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை, சில நாட்களில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.அடுத்த ஒன்பது மாதங்களில், தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அதில் இருந்து தன் செயல்பாடுகளை அதிரடியாக அமைத்துக் கொண்ட அண்ணாமலை, தி.மு.க., மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் முன் தைரியமாக வைத்தார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்த்தார். தோல்வி பரிசாகக் கிடைத்தது. ஆனாலும், சிறிதும் சோர்வடையாமல், தி.மு.க.,வையும், தமிழக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.ஆதாரங்களுடன் அவர் வைத்த வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபட்டன.
இந்நிலையில், தமிழகம் முழுதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தினார். அதற்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் வந்தது. அதை வைத்து தான், அ.தி.மு.க., கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்க அண்ணாமலை தயாராகி விட்டார்.இந்த முறை எப்படியும் பா.ஜ., இரண்டு இலக்க சதவீத ஓட்டுகள் பெறும் எண்ணத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க உத்தேச வேட்பாளர் பட்டியலோடு சமீபத்தில் டில்லி சென்ற அண்ணாமலையிடம், அமித் ஷாவும், நட்டாவும், இம்முறை அண்ணாமலையும் போட்டியிட வேண்டும் என தலைமை விரும்புகிறது என கூறியுள்ளனர் ‘உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் நீங்கள் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டால், கணிசமான ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
‘இந்த மூன்று தொகுதிகளில் கோவையில் கட்சி நல்ல கட்டமைப்புடன் உள்ளதால், அங்கேயே களம் இறங்கலாம். தலைவரே போட்டிக்கு களத்தில் வரும்போது, தொண்டர்களும் தமிழகம் முழுதும் உற்சாகமாக பணியாற்றுவர்’ என கூறியுள்ளனர். தனக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என அண்ணாமலை மறுத்துள்ளார். ஆனால், போட்டியிட்டே ஆக வேண்டிய சூழல் உள்ளது என அமித் ஷாவும், நட்டாவும் அண்ணாமலையிடம் வலியுறுத்தி கூறியுள்ளதாகத்தெரிகிறது.
இதையடுத்து, டில்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை, கோவைக்கு சென்று கட்சியின் உள்ளூர் தலைவர்களை அழைத்து பேசி, தொகுதி நிலவரம் குறித்து முழுமையாக கேட்டறிந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.அண்ணாமலையைப் போல், மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் நீலகிரி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பொள்ளாச்சியில் குஷ்பு களமிறக்கப்டுகிறார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை டில்லிக்கு கொண்டு சென்ற உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. கோவை – அண்ணாமலை, திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், தென் சென்னை – ஹெச்.ராஜா, கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி – பேராசிரியர் சீனிவாசன், ராமநாதபுரம் – கருப்பு முருகானந்தம், தென்காசி – ஜான்பாண்டியன், வேலுார் – ஏ.சி.சண்முகம், துாத்துக்குடி – சசிகலா புஷ்பா, விருதுநகர் – ராதிகா, ஸ்ரீபெரும்புதுார் – காயத்ரிதேவி, பெரம்பலுார் – பாரிவேந்தர், மத்திய சென்னை – வினோஜ் பி செல்வம் – நீலகிரி – எல்.முருகன். பொள்ளாச்சி குஷ்பு