தமிழக பாஜக தற்போது எதிர்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அண்ணாமலையில் அதிரடி நடவடிக்கைகள் திமுகவிற்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மின்சார துறை மீதான ஊழல் குற்றசாட்டு தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்று தமிழகத்தின் தி.மு.க அரசினை கண்டித்து கடந்த 7 ஆம் தேதி தமிழக முக்கிய கோவில்களின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது பாஜக.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை 10 நாட்களுக்குள் கோவில்களை திறக்கவிட்டால் தி.மு.க அரசினை ஸ்தம்பிக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின் 14 ஆம் தேதி அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க உத்தரவிட்டது தி.மு.க அரசு இது பா.ஜ.கவுக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடியது. இது பாஜகவிற்கு புது உத்வேகத்தை கொடுத்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக ஒரு கிலோ இனிப்பும், காரமும் வழங்கப்படுவது வழக்கம். பொதுவாக போக்குவரத்து துறை அமைச்சர் பரிந்துரை செய்யும் நிறுவனத்தின் இனிப்பு, கார வகைகளையே அதிகாரிகள் கொள்முதல் செய்து ஊழியர்களுக்கு வழங்குவார்கள். அதில் தரத்தையும், கட்டுபடியாகும் விலையை உறுதி செய்து கொண்ட பின்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இனிப்புகளை கொள்முதல் செய்வார்கள். இதுதான் நடைமுறை.
இந்த நிலையில்தான் போக்குவரத்து துறை அமைச்சரின் மகன் திலீப் இந்த விஷயத்தில் அவராகவே தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 30% கமிஷனுக்காக போக்குவரத்து கழகத்தின்சில முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்து இனிப்பு கொள்முதல் செய்வதில் பல நிபந்தனைகளை விதிக்கும்படி வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. அதன் பின் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதில் வருடத்திற்கு 100 கோடி அளவு வருமானம் ஈட்டும் கடைக்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் என கூறினார்கள்.
இதை மேற்கோள் கட்டி அண்ணாமலை பாவளி பண்டிகைக்கு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஸ்வீட் கொடுப்பதற்கு ரூபாய் 100 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கின்ற கம்பெனிகளில்தான் ஸ்வீட் வாங்குவேன் என்று அமைச்சர் ராஜகணப்பன் சொல்ல காரணம் கரப்ஷனா, பல்க் கமிஷனா என்பதை முதல்வர் பார்க்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் தமிழக அரசின் டெண்டர் திருத்த விவகாரம் விவாதப் பொருளானது. தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திடம் கொள்முதல் செய்யாமல் ரூ100 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம்தான் இனிப்புகள் வாங்குவேன் என அடம்பிடிப்பது ஏன் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் நிறுவனங்களிடம் இனிப்புகளை கொள்முதல் செய்யக் கூடாது; ஆவின் நிறுவனத்திடம்தான் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார். இது அண்ணாமலையின் இரண்டாவது வெற்றியாக பார்க்கப்படுகிறது.
“கடந்த சில வாரங்களாகவே தமிழக அமைச்சர்களில் சிலர் மறைமுக கமிஷன் பெறுவதில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவாக குற்றச்சாட்டினை முன்வைத்தார். மேலும் தமிழகத்தின் தற்போது ஹாட் டாபிக் தி.மு.கவின் மின்சார ஊழல். மின்சாரம் தயாரிக்க இயலாத வலுவிழந்த நிறுவனத்திற்கு திமுக அரசு 5000 கோடி ஓப்பந்தம் போடுவதற்கு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. என அண்ணாமலை கூறினார். இது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியது.
அதன் பின் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று INR 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. ஏன் பதில் சொல்லுங்கள் பாலாஜி என மின்வாரியத்தில் நடைபெற்ற கமிஷன் ஊழலை வெளிகொண்டுவந்தார் அண்ணாமலை.
அண்ணாமலை அவர்கள் ஆதரமில்லாமல் பேசக்கூடாது, ஆதராத்தோடு பேசுங்கள் இல்லை என்றால் மன்னிப்பு கேட்கவேண்டும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அதற்கு அண்ணாமலை அவர்களை மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, வழக்கு போட்டு கொள்ளுங்கள்எ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன், என கூறினார். ஆனால் இதுவரை வழக்கு தொடர்வது குறித்து திமுக தரப்பு மௌனம் சாதிக்கிறது. அப்படி என்றால் அண்ணாமலை ம்=கூறியது உண்மைதானோ. என்ற கேள்வி எழும்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இது பாஜக பிரதிநிதிகளுக்கு புதுதெம்பை ஊட்டியது .
மேலும் அண்ணாமலையின் நேற்று முன்தினம் கொடுத்த பேட்டி வேற லெவலில் இருந்தது. கண்டிப்பாக திமுக ஆட்டம் கண்டிருக்கும் லெவலில் இருந்தது. தமிழக பாஜகவை சீண்டினால் அதற்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என கூறினார். திமுகவிற்கு பிரதமர் மோடிபற்றியும் தமிழக பாஜக பற்றியும் தெரியவில்லை பிரதமர் மோடி அவர்கள் எங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டார் இனி அடித்து ஆடுவோம் என தெரிவித்துள்ளது தான் இன்றைய ஹாட் டாபிக் .
இன்னும் மூன்று மாத காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் சூசகமாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி 3 மாதம் பதவியில் நீடிப்பது பெரிய விஷயம் என கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















