தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக எதிர்கட்சி தலைவராக வலம் வருகிறார். அண்ணாமலை,இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம்‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். கடந்த ஆண்டு தொடங்கிய ‘திமுக பைல்ஸ் தற்போது வரை பல பாகங்களாக வெளியிட்டு வருகிறார்.
ஜூலை மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் இரண்டை’ வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்றில் 2ஜி ஊழல் குறித்து உரையாடல்களை வெளியிட்டு வருகிறார்
இதைத் தொடர்ந்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்றின்’ 4-வது ஆடியோ பதிவை அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில், திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உரையாடலில், ஒரு வழக்கு விசாரணை கையாளப்படுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், வழக்கின் விவரம் ஆடியோவில் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பதிவில் அண்ணாமலை,“2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையேயான உரையாடல்களை வெளியிட்டுள்ளோம்.“2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, 2ஜி ஊழலில் திமுகவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையின் தலையீடு, முக்கிய ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்கவோ, மாற்றவோ முடியும் என்பதற்காக ரெய்டு பற்றிய முன்கூட்டிய தகவல் பகிரப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை தி.மு.க எப்படி கையாண்டது என்பது பற்றிய திமுக பைல்ஸ்-3 மூன்றாவது டேப் : (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) திமுக எம்பி முன்னாள் அமைச்சருமான அ .ராசா &தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர். எம் எஸ் ஜாபர் சேட், இடையே நடந்த உரையாடல்….ஆடியோவை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.