பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது : திருச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டிடத்தை பாரத பிரதமர் வருகின்ற 2ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து தயாநிதிமாறன் பேசியதற்கு ஒன்று தெரியாமல் சொல்லிவிட்டேன் அல்லது மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினால் அது முடிவுக்கு வந்து விடும். ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் குறித்து நான் பேசியபோது என் மீது எஃப்ஐஆர் போடப்பட்டது. அப்படியானால் நடுநிலையோடு காவல்துறை செயல்பட்டால் தயாநிதிமாறன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர வேண்டும் என கூறினார்.
மேலும் இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும்செய்யாத செயலை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்கள் செய்தனர். சமூக வலைதள பக்கங்களில் கோ பேக் மோடி என பதிவிட்டனர். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து கோ பேக் ஸ்டாலின் என பதிவிடுவோம். ஆனால் அவரின் பதவியை கருதி நாகரிகமாக செயல்படுகிறோம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையை விட்டு எங்கு சென்றாலும் ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்பதை எங்களால் ட்ரெண்டிங் செய்ய முடியும். ஆனாலும் அவரின் பதவிக்கு மரியாதை தருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் கோ பேக் ஸ்டாலின் என்பதை திமுக it wing ஐ விட 1000 மடங்கு ட்ரெண்டிங் செய்ய முடியும் . இந்த சவாலுக்கு அமைச்சர் TRB ராஜா ஒத்துக் கொள்வாரா? என சவால் விட்டார். பாஜக ஐ.டி விங் சமூகவலைதளங்களில் கம்பு சுற்றுபவர்கள் , எங்களிடம் திமுக iT Wing தனது வேலையை காட்டக்கூடாது என்றார்.
இந்த நிலையில் சமூக வலைதளபக்கங்களில் கோ பேக் ஸ்டாலின் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு பதிலடி தரமுடியாமல் திணறி வருகிறது திமுக ஐ .டி விங்