தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மின்வாரியத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அங்கங்கே தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நிலக்கரி அளவும் 2 நாட்கள் தான் உள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது : திமுக அரசு மின்சாரத்தை அதிகமான விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மின்சாரம் ஒரு யூனிட் விலை 20 ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இது நான்கு மடங்கு அதிகம். திமுக அரசு வாங்க போகும் நிறுவனம் திமுகவினர் கையகப்படத்தப்போகும் நிறுவனம் . இதன் மேலும் இந்த டெண்டர் 4000 கோடி முதல் 5000 கோடி வரை டெண்டர் விட முடிவு செய்துள்ளதாகவும் இந்த டெண்டர் மூலம் திமுகவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மக்கள் மீது நிதிச்சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மின்சாரத்துறைக்கும் பேரிழப்பு ஏற்படும் எனக் கூறியிருந்தார்
அடுத்த வாரம் சோலார் மின்சாரம் தொடர்பான முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன்” என்று அண்ணாமலை அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார்.அடுத்த வாரம் அண்ணாமலை என்னென்ன ஆதாரங்களை வெளியிடப்போகிறார் என்ற கேள்விகள் இப்போதே ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன.
இந்த நிலையில் மின் துறை செந்தில் பாலாஜி அண்ணாமலை அவர்கள் தகுந்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் இல்லை என்றால் ஒரு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அண்ணமலை அவர்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. வேண்டுமென்றால் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்து கொள்ளட்டும் அங்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என ஓப்பன் சேலஞ் விட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















