சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீது கடுமையான மின்கட்டணச் சுமை ஏற்றிவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, டாலர் சிட்டி, டல் சிட்டி என்று வழக்கம்போல ஒப்பித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சிறையில் இருக்கும் சாராய அமைச்சர் ஆரம்பித்து வைத்த மின்கட்டண உயர்வு, தற்போது 15% முதல் 50% கட்டண உயர்வு, நிலைக்கட்டணத்துக்கு 430 சதவீதம் உயர்வு, காலை, மாலையில் பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய 6 மணியிலிருந்து 10 மணிவரை உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, 15 சதவீதம் கட்டண உயர்வு என, தொழில்முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்?
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், நாளைய தினம் சிறுகுறு நடுத்தர தொழில்முனைவோர்கள் தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















