கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டியிட்டுவிட்டார் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர் மட்டம் 136 அடி இருக்கும் போதே கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது.
அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்காதது ஏன் என பல முறை கேட்டும் தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்.
அதன்படி இன்றைய தினம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக மக்களுக்கு சொந்தமானது. அப்படி இருக்கும்போது கேரளாவில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் வைத்திருப்பது தமிழகத்திலிருந்து யாருக்கும் அந்த செல்லவில்லை தமிழக மக்களுக்கான உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு தாரை வார்த்து உள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சரணடைந்துள்ளார்.அணையின் பாதுகாப்பானதே மிகவும் உலகத்திலேயே சிறந்த அணியாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.திமுக அரசு உடனடியாக தமிழக மக்கள் மற்றும் 5 மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அனைவருடைய கொள் அளவினை உயர்த்த முயற்சி எடுக்க வேண்டும் என்றும்.
முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது ஒரு காமெடி நடிகர் போல் நடந்து கொள்கிறார் முதல்வர் பேபி அணையில் 10 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார் ஆனால் கேரள அரசோ கேரள முதல்வரும் அதுபோல் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என தெரிவிக்கின்றனர். ஸ்டாலினுக்கு ஏனிந்த வேலை.
திமுக ஆட்சியில் என்னதான் செய்தார்கள்?
“கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சென்னை வெள்ளத்தில் நடந்தார். ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதும், சென்னை வெள்ளத்தில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடந்தார். இப்போது முதல்வராகவும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சென்னை வெள்ளத்தில் நடக்கிறார். அப்படியானால் திமுக ஆட்சியில் என்னதான் செய்தார்கள்?”
“மோடி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததே, சென்னை வெள்ளத்தில் மிதப்பதற்கு காரணம்”
உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை. தமிழக முதல்வர் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே உங்களால் கேள்வி கேட்க முடியுமா கோபாலபுரத்தில் விசுவாசமாக இருக்கும் நீங்கள் ஒரு நேர்மையான உண்மையான செய்தியாளராக இருந்தால் கேட்க உங்களுக்கு திராணி இருக்கிறதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனல்பறக்கும் கேள்விகளை நிருபர்கள் இடையே மீண்டும் கேட்டார்