தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் திமுகவை சேர்ந்த 2 பேர் தவறாக நடந்துள்ளனர். பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தொடர் வலியுறுத்தலால் 2 நாட்களுக்கு பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது.
இதனால் காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. முன்னாள் எம்.பி.மஸ்தான் கொலை வழக்கில் காவல் துறைக்கு பாஜக அழுத்தம் கொடுத்தது. கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்.
விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மௌனம் தான். இவ்வாறு அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















