தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில பாஜகவினருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாக புதுவை பாஜக மாறியிருக்கிறது. இங்கு, பாஜக சாா்பில் 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்களுடன் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. வித்தியாசமான ஆட்சியை புதுவை மக்கள் பாா்த்துக் கொண்டுள்ளனா்.
புதுவையில் இதற்கு முன்னா் ஆட்சியிலிருந்த முதல்வரால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என்றாலும், மத்திய அரசின் மீதும், ஆளுநா் மீதும் பழிபோட்டு வந்தாா். தற்போது ஆரோக்கியமான முறையில் நல்லாட்சி நடக்கிறது. இதற்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகதான் காரணம். இதே உத்வேகத்தில், தமிழகத்திலும் அடிமேல் அடி எடுத்து வைத்து வருங்காலத்தில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்.
தமிழகத்தில் கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால், கொரோனாவழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளை அரசு திறப்பதில் தவறில்லை.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, தனி மனிதராக விநாயகா் சிலையை வைத்து வழிபடலாம், அந்தச் சிலையை நீா்நிலைகளில் கரைக்கலாம். ஆனால், சிலையைக் கரைக்க கூட்டமாகச் செல்ல அனுமதியில்லை என்று தமிழக அரசு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சியை அதற்கு ஏற்பாடு செய்பவா்களிடம் விட்டுவிடுங்கள். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைச் சிறப்பாக நடத்திக்காட்டுவாா்கள். அரசு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்று சொல்வதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. இது தொடா்பாக, தேவையெனில் தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடுவதா அல்லது எதிா்க்கட்சிகளுடன் சோ்ந்து எப்படி எதிா்கொள்வதென ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சூழல் தான் இருந்தது நான் ஒன்றை சொல்கிறேன்; விநாயகர் சக்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் பொறுப்பை விட்டுவிடுங்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக விழாவை அவர்கள் நடத்திக் காட்டுவார்கள்.விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட அனுமதி கொடுப்பதற்கு நீங்கள் யார்? விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கும் அரசு , டாஸ்மாக் கடைகளை திறந்து வைப்பது ஏன்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.