வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒரு சார்பு படம் நியாயம் என்று காண்பித்து வந்தார்கள். மற்றொரு பக்கத்தின் நியாத்தினை காட்டுவதில்லை.தற்போது தமிழ் சினிமா துறையில் படம் இயக்குபவர்கள் பெரும்பாலும் இடதுசாரி சிந்தனையாளர்களும் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள் தான் அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளித்துவருகிறார்கள் இந்து மதத்திற்கு எதிராக உள்ள செல்வேந்தர்கள்.
இயக்குனர் மோகன் ஜி அவர்கள் வண்ணாரப் பேட்டை படத்தை தொடர்ந்து இரண்டாவது படமகா இயக்கியப்படம் திரௌபதி. இதில் இரண்டு சமூகம், நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார்.
இதன் ட்ரெயிலர் ரிலீஸ் ஆன போதே எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி திரௌபதி படம் வணிக ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது.
திரௌபதி படம் பிரபல நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம். ஆடியோ வெளியிட பெரிய மேடை கிடையாது தயாரிப்பாளர்கள் இல்லாமல் கூட்டு முயற்சியில் உருவான திரைப்படம்.. இன்று தமிழகம் முழுவதும் பேச்சு பொருளாக மாறியது.
இதனால் இயக்குனர் மோகன் ஜீ மீது எதிர்ப்பார்ப்பு எகிறியது. யாரும் எடுக்காத கதைக்களம் என்பதனால் அவரின் முயற்சியை வலது சாரி ஆதரவாளர்கள் அரசியல்கட்சிகள் ஆதரவு அளித்தார்கள். நாடக காதலை தோலுரித்த உண்மைக் கதைகள் மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் படத்தை இயக்கி அதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அந்த படமும் மதமாற்றம் போதைப்பொருள் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படம் பட்டி தொட்டியெங்கும் வெற்றி நடை போட்டுவருகிறது.
உண்மை கதைகளை எடுத்துச்சொன்னால்படத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதினை இந்த இருபடங்களும் நிரூபித்துள்ளது. இதனால் பல வலது சாரி சிந்தனையுள்ள பல இயக்குனர்கள் வெளிவர தொடங்கியுள்ளார்கள்.
ராகுல் பரமஹம்ஷா என்ற தயாரிப்பு நிறுவனம் நாடக காதல் குறித்து படம் தயாரிப்பதாக ருத்ராதாண்டவம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தயாரிப்பாளர் விநியோகஸ்தர்ஜெயம் எஸ்.கே.கோபி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அடுத்த சம்பவம்..
விரைவில் First Look….