ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு இரு முதல்வர்கள் மறுப்பு !
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தர, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் மறுத்து விட்டதால், பா,ஜ., எதிர்ப்பு கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், வரும் ஜூலையில் முடிகிறது இதனால், ஜனாதிபதி தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 48 சதவீத ஓட்டுக்கள் பா.ஜ.,வுக்கு உறுதியாகியுள்ளதால், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
ஆனாலும், வலுவான வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.,வுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த உதவும் என, இக்கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரசை ஆதரிக்காவிட்டாலும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.