ஏ .ஆர் ரஹுமான் ரூ 3 கோடி வரி ஏய்ப்பு! வரியை மீட்க வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை தீர்ப்பாயம் ஏற்காததால், அதை எதிர்த்து வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது மனுவை ஏற்ற நீதிமன்றம், ரஹுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பதற்காக பெறப்பட்ட 3 கோடியே 47 லட்சம் ரூபாய் ஊதியத்தை, தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு நேரடியாக பெற்றுள்ளார். இதன் மூலம், வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ரஹ்மான் முயற்சித்ததாக கூறி, வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. வருமான வரி கணக்கீட்டு அதிகாரியிடம், ரஹ்மான் அளித்த விளக்கத்தை ஏற்று விசாரணை கைவிடப்பட்டது.
பின்னர், முதன்மை ஆணையரால் மறு மதீப்பீடு செய்யப்பட்டபோது, ரஹ்மான் வருமான வரி செலுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஹ்மான் தொடர்ந்த வழக்கில், முதன்மை ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ரஹ்மான் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.