இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வருகின்றது. பல மாநிலங்களில் 144 போடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோன வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் . டெல்லியில் இஸலாமியர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பந்தல் போட்டு போராட்டம் நடத்தினர். அதுமட்டுமில்லாமல் உலகமே கூட்டமாக கூடாதீர்கள் என்று அறிவுறுத்தும் நிலையில் இஸ்லாமியர்கள் கூட்டம் கூடியுள்ளனர். தமிழகத்தில் இஸலாமியர்கள் ஆங்காங்கு போராட்டம் நடந்து வந்தது குறிப்பிட தக்கது,.
டெல்லி நகரம் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளதால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ – CAA) எதிராக தொடர்ந்து ஷாஹீன் பாக் பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை போராட்டம் செய்த இடத்தில் இருந்து டெல்லி காவல்துறை இன்று அகற்றியது.
“கொரோனா அச்சம் காரணமாக ஷாஹீன் பாக் போராட்டத்தை கைவிடுமாறு, அவர்களிடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை மறுத்துள்ளனர். அதன் பின்னர், 144 தடை உத்தரவு விதிகளை கடைபிடிக்காமல் செயல்படுவது சட்டவிரோதமானது என்பதால், அதை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தென்கிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் ஆர்.பி. மீனா செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.