பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்.அந்த அருமனை கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்துவப் பேரவை தலைவரான ஸ்டீபனை கைது செய்தனர் காவல்துறை
கன்யாகுமரி மாவட்டத்தின் அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜாா்ஜ் பொன்னையா பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக பேசினார். மேலும் இந்துக்கள் எங்களை ஒன்றும் பண்ணமுடியாது ஒரு மயிரும் புடுங்க முடியாது என மத மோதலை உண்டாக்கும் விதத்தில் பேசினார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலானதை தொடர்ந்து ஜாா்ஜ் பொன்னையா பாதிரியாரை கைது செய்ய கூறி தமிழகம் முழுவதும் குரல்கள் எழுந்தது.பின்னர் சென்னைக்கு தப்பி செல்ல முயன்ற ஜாா்ஜ் பொன்னையாவை கன்யா குமரி காவல்துறைகைது செய்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முதல் குற்றவாளியான ஸ்டீபனை தமிழக கேரள எல்லையான மாங்கோடு பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்ற நிலையில் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
அருமனை கிறிஸ்துவ பிரமுகர் ஸ்டீபன் என்பவர் சர்ச்சை கூட்டங்களை நடத்துவதற்கு பணம் தருபவர் அதை முன்னின்று நடத்துவது எல்லாம் இவர் தான். இவர் மீது ஏற்கனவே 25 வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக குண்டாசில் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. அருமனை ஸ்டீபன் குழித்துறை மாஜிஸ்திரேட் முன் நேற்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட பின் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.