உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. 4 லட்சத்திற்கும் மேலான உயிர்களை பலிவாங்கிக் உள்ளது. கொரோனாவை விரட்ட உலகமே மருந்து கண்டுபிடித்து விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்லாம் பாபா எனும் ஒருவர் முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்துவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் இதனை நம்பி அவர் சமயத்தை சார்ந்த மக்கள் ஓடி வந்துள்ளனர். இவர்கள் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் முத்தம் வாங்கிச் சென்ற பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலின்படி, ரத்லாம் மாவட்டத்தில் மட்டும் 85 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதில் 19 பேருக்கு அஸ்லாம் பாபா இருந்த நயபூரா பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அஸ்லாம் பாபா அளித்த முத்தத்தின் மூலம் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அஸ்லாம் பாபாவிற்கு ஏற்கனவே வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவரிடம் இருந்து பிறருக்கு பரவியிருக்கக்கூடும்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அஸ்லாம் பாபு கடந்த ஜூன் 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து பாபாவிடம் தொடர்பில் இருந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 6 பேருக்கு கடந்த 7ஆம் தேதி அன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அஸ்லாம் பாபாவிடம் ஆசி பெறச் சென்ற பலரும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் பட்டியலில் மத்தியப் பிரதேச மாநிலம் 7வது இடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி 10,241 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,042 பேர் குணமடைந்துள்ளனர். 345 பேர் பலியாகியுள்ளனர். 2,768 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஒரு வேலை அஸ்லாம் பாபா நோய் தொற்றை பரப்புவதற்காக இந்த செயலில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.