உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி மற்றும் லேஹ் இடையே கடல் மட்டத்தில் இருந்து10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.உயரத்தில் கட்டப்பட்ட 8.8 கிமீ வியூக ரோதங் சுரங்கம், செப்டம்பர் இறுதியில் திறக்கப்படும். மணாலி மற்றும் லேஹ் இடையேயான 474 கிமீ தூரத்தை ரூ. 3,200 கோடி சுரங்கப்பாதை 46 கி. மீ தூரத்தை 46 கி. மீ. அதாவது எட்டு மணி நேர பயணம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும்
ஜூன் 3, 2000 அன்று திட்டத்தை அறிவித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்குப் பிறகு இந்த சுரங்கப்பாதை என்றும் அழைக்கப்படுகிறது. எல்லை சாலைகள் அமைப்பு (BRO) பணியில் ஒப்படைக்கப்பட்டது. 2011.-ஆம் ஆண்டு தோண்டத் தொடங்கியதிலிருந்து காலக்கெடு தள்ளிவிட்ட புவியியல் ரீதியான சவால்களை இந்த திட்டம் எதிர்கொண்டது. பிப்ரவரி 2015-ல் இந்த திட்டம் முடிக்கப்பட வேண்டும், ஆனால் தண்ணீர் உட்புகுத்தல், பாறை சுரங்கத்தை உடைக்கும் போது தடைகள் அப்போது காங்கிரஸ் ஆட்சி என்பதால் குவாரிக்குத் தேவையான நிலம் ஒதுக்க தாமதம் , என பல தடைகளை கடந்து மெதுவாக வேலைகள் நடந்தன.மோடி அரசு அமைந்த பிறகு அதன் வேலைகள் தடபுடலாக நடைபெற்றது. தற்போது அடல் சுரங்க பாதையை திறக்கும் அளவிற்கு வந்துள்ளது. உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.
இது குறித்து, இப்பணிகளின் தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் கூறிய தாவது:இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.’அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்ப துடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
அடல் சுரங்கப்பாதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ
அதே சமயம் இந்த பகுதி மிகவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக லடாக் பகுதிக்கு மிகப்பெரிய அளவில் படைநகர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.வழக்கமாக ரோஹ்தாங் வழியாக நடைபெறும் போக்குவரத்து பனிக்காலங்களில் சற்றே அதிகமான சிரமத்தை அளிக்கும். பனிக்காலத்தில் ராணுவம் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்தும் அதே நேரத்தில் லாஹூல் பள்ளதாக்கு பகுதி மக்கள் ஆறு மாதங்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
தற்போது இந்த அடல் சுரங்கம் ரோஹ்தாங் பாஸ் பகுதிக்கு அடியில் மலையை குடைந்து சுமார் 8.8கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லாஹூல் பகுதி மக்கள் பனிக்காலத்திலும் தங்கு தடையின்றி மற்ற பகுதிகளுக்கு சென்று வர முடியும். ராணுவத்திற்கு அதிக பயன்படும் பாதையாக இந்த சுரங்கம் அமைந்துள்ளது. அடல் சுரங்கப்பாதை எந்த வானிலை நிலையிலும் ஒரு நாளைக்கு 3,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.