வணக்கம்! 2020ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அட்சய திருதியை. சயம் என்றால் தேய்தல், அட்சயம் என்றால் வளருதல் ஆகும்.
அட்சய திருதியை நாளில் ஏன் உப்பு வாங்க வேண்டும்,அதன் தத்துவம் என்ன? கடலிலிருந்து எவ்வளவு உப்பு எடுத்தாலும் கடலில் உப்புக் குறையாது வளர்ந்து கொண்டே போகும். அதே போல் என் வாழ்க்கையிலும் உப்பைப்போல் எல்லா வளங்களையும் வளரச் செய்வாயாக என இறைவனை வேண்டுவதே இதன் தத்துவம் ஆகும்.
விஜயநகர சாம்ராஜ்யத்தில் விஜயராகவ நாயக்கர் ஆட்சி காலத்தில் நாட்டில் ஒரு காலத்தில் பஞ்சம் வந்து விட்டது.நாட்டு தான்ய களஞ்சியத்தில் தான்ய கையிருப்பு மிக மிகவும் குறைந்துவிட்டது.என்ன வென்று செய்வது என்று அரசர் மந்திரியிடம் ஆலோசனை நடத்தினார் அவர் ஆலோசனைப்படி அரசர் நாட்டில் உள்ள உணவு பஞ்சத்தை நீக்க மகான் ஸ்ரீ இராகவேந்திரரிடம் முறையிட்டார்.
ஸ்ரீ இராக வேந்திரும் மன்னரின் கோரிக்கையை ஏற்று நாட்டில் உணவு பற்றா குறையை நீக்க தான்யக் களஞ்சியத்திற்கு வந்தார். 5 பேருக்கு மட்டுமே கொடுக்கக் கூடிய அளவில் தானியம் இருந்தது. ஸ்ரீ இராகவேந்திரர் அச்சிறு குவியலின் மீது தனது கையை வைத்து அட்சயம் என்றார்..
பின்னர் மக்களுக்கு கொடுக்கச் சொன்னார்.என்ன ஆச்சரியம் தான்யம் அள்ள அள்ள வந்து கொண்டே வளர்ந்து கொண்டே இருந்தது. இது நடந்தது ஒரு அட்சய திருதியை நாளில் தான்.ஆகையால் ஸ்ரீ ராக வேந்திரா நாமகரத்துடன் அட்சய திருதியை நாளில் உணவின்றி சிரமப்படும் ஏழைகளுக்கு உணவளித்து அட்சய திரிதியை நாளில் பகவானின் அனுக்ரஹம் பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














