தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளிலிருந்து தப்பிவிட்டார்” என்ற செய்தி உண்மையில்லை. ஒரே ஒரு 420 வழக்கில் ‘சமரசம்’ என்ற பெயரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்றபடி, ஊழல் தடுப்பு வழக்குகளிலிருந்து அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. “தண்டனை நிச்சயம் உண்டு” என்கிறார்கள்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜராகுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு முந்தைய அதிமுக அரசில் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய போது மோசடி செய்ததாக பாலாஜி மீது மூன்று வழக்குகளை பதிவு செய்தது. இருப்பினும், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கை ரத்து செய்தது.
பாலாஜிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்டது என்று ஆதாரங்கள் IANS க்கு தெரிவித்தன
மத்திய குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கையின் படி, செந்தில் பாலாஜி, போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, அனைத்து மாநில போக்குவரத்து நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை மூத்த அதிகாரிகள், இணைந்து போக்குவரத்து துறைக்கு தகுதியான ஆட்களை தேர்ந்தெடுக்காமல் போலியான மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து குற்றச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்குவதற்காக பதிவேடுகளில் குளறுபடிகள் நடந்ததாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தது. மார்ச் 2021 அன்று சென்னை குற்றப்பிரிவு தாக்கல் செய்த சமீபத்திய குற்றப்பத்திரிகை, ஆட்சேர்ப்பு ஊழல் நடைமுறைகள் உட்பட அமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜி அவ்வளவு எளிதில் வர முடியாது என்கிறார்கள் கண்டிப்பாக அவரின் பதவிக்கு ஆபத்தாக தான் முடியும். இனி தான் தரமான சம்பவங்களை எதிர்பாக்கலாம்