இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட சிபிஎம் முடிவு! இதே கம்யூனிஸ்ட் தான் 1947இல், “இந்த சுதந்திரம் பொய்” என்று நொண்டி சாக்கு சொல்லி சுதந்திர தினத்தை கொண்டாடாமல் தவிர்த்தது.
சென்ற வாரம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் ஏன் கலந்து கொண்டாய் கம்யூனிஸ்ட் வரலாறு : 1, 1920இல் வெளிநாட்டில் (டாஷ்கண்ட் – அப்போதைய சோவியத் யூனியன்) உருவானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 2, சோவியத் அடிமையான கம்யூனிஸ்ட், முதலில் – வழக்கம்போல – பிரிட்டிஷ் ‘ஏகாதிபத்தியத்தை’ எதிர்த்தது. ஆனால் 1942இல் ஹிட்லர் சோவியத்தில் கால் வைத்ததும், “நமக்கு இப்ப முக்கியம் ஏகாதிபத்திய எதிர்ப்பல்ல, ஆக்கிரமிப்பாளனான ஹிட்லரை எதிர்ப்பதே. சோவியத்தும் இங்கிலாந்தும் இப்போது நண்பர்கள் (பொது எதிரி: ஹிட்லர்).
எனவே, பிரிட்டிஷை எதிர்க்காமல் ஜால்ரா போடு” என்று சோவியத் யூனியன் இந்திய கம்யூனிஸ்ட் அடி….. கட்டளையிட்டது. அதையடுத்து, இந்திய சுதந்திரத்துக்காக போராடுவதை கைவிட்ட இந்திய அடி.. கம்யூனிஸ்ட்டுகள், பிரிட்டிஷை ஆதரித்து கோஷமிட்டனர்.
வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இயக்கங்களில் பங்கெடுக்க மறுத்தது. (வெள்ளையனே வெளியேறு காந்தியின் அடுத்த போராட்டம் என்பது வேறு விஷயம்).3, 50களில் திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை வரவேற்றது இந்திய கம்யூனிஸ்ட்.
4, 1962இல் இந்தியாவை சீனா ஆக்கிரமித்ததையும் கம்யூனிஸ்ட் வரவேற்றது. சீனாவுக்கு எதிராக போராடும் இந்திய வீரர்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது என கட்டளை இட்டது. 5, 2017இல் டோக்லம் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்காமல் சீனாவை ஆதரித்தது.6, 2020இல் கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திலும் சீனாவை ஆதரித்தது இதே கூட்டம். நீங்கள் பச்சோந்தி மாதிரி நிறம் மாற்றினாலும் உங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் கம்யூனிஸ்ட்.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனாளியாளர் செல்வநாயகம்.