2019 ஆகஸ்டு 5 ஜம்மு காஷ்மீர் 370 நீக்கம், 2020 ஆகஸ்டு 5 ராமர் கோவில் அடிக்கல்! 2021 ஆகஸ்டு 5 பொதுசிவில் சட்டம்?
நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொது சிவில் சட்டம் வருகின்ற பாராளுமன்ற கூட்ட தொடரிலேயே சட்டமாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது அப்படி ஒரு வேளை மத்திய பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைத்தால் அதற்கான தேதி ஆகஸ்டு 5 என்றே இருக்கலாம்.
அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பொது சிவில் சட்டம். இந்த 3 முக்கிய வாக்குறுதிகளில் 2 நிறைவேற்றியது மோடி அரசு இதில் பொது சிவில் சட்டம் தான் தற்போது எஞ்சியிருக்கும் வாக்குறுதி அந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது மத்திய மோடி தலைமையிலான அரசு இதற்கு வலு சேர்க்கும் விதமாக டெல்லி உயர் நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது.
ஆகஸ்ட் 5 ம் தேதி மோடியின் அரசியல் வாழ்வில் பிரதமராக இருந்து சாதிக்கப்பட்ட இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கிறது. 2019 ஆகஸ்டு 5 ல் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த விசேஷ சலுகை யான ஆர்ட்டிகிள் 370 வது பிரிவு நீக்கப்பட்டது. 2020 ஆகஸ்டு 5 ல் தான் இந்துக்களின் கனவாக இருந்த ராமர்கோயில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டுவதற்கு மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த 2021 ஆகஸ்ட் 5 ல் பொது சிவில் சட்டமா? இல்லை மக்கள் தொகை கட்டுப்பா டா? எது என்று தெரிய வில்லை. மக்கள் தொகை கட்டுப்பாடு பிஸ்கோத் மேட்டர் அதனால் பொது சிவில் சட்டம் தான் நிறைவேற இருக்கும் என்றுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பாராளுமன்றம் அடுத்த வாரம் 19 ம் தேதி அன்று கூடுகின்ற நிலையில் அதையடு த்த சில தினங்களில் பொது சிவில் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் ஓட்டெடுப்பு என்று சம்பிரதாய சடங்குகள் முடிந்து ஆகஸ்டு 5 ல் பொது சிவில்சட்டம் அமலுக்கு வரலாம்.