“ஏற்கனவே இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ராசி இல்லை என்பதால் தான் புதிய செண்டிரல் விஸ்ட்டா கட்டிடம் கட்டப்படுகிறது” என புரளி கிளப்பி வலைதளங்கள் ‘கட்டுரை’ வெளியிட, அதை அடிப்படையாக வைத்து பிரதமருக்கும், Housing & Urban Affairs அமைச்சர் ஹர்தீப் பூரிக்கும் ‘அறிவுரை’ வழங்கி சிலர் ‘கடிதங்கள்’ எழுதியுள்ளனர், “ஏனிந்த மூட நம்பிக்கை உங்களுக்கு? உங்களுக்கு மூளை சரியில்லையா?” என.
அந்த ‘கட்டுரை’ எழுதியவரும், அந்த தவறான கட்டுரையை வெளியிட்ட வலைதளத்தையும் (தி ஹிண்டு? தி வயர்? தி பிரிண்ட்?) வெளுத்து வாங்குகிறார் சிங்,
“இந்த கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கி 2012இல் கையெழுத்திட்டவர் மீரா குமார். அவருக்கு மூளை சரியில்லை என்கிறீர்களா?
அதற்கு ஒப்புதல் வழங்கிய ஜெய்ராம் ரமேஷுக்கு மூளை சரியில்லையா? நோய் தொற்று காலத்தில் வெவ்வேறு பணிகளில் தீவிரமாக இருக்கும் எங்களை இம்மாதிரி புரளிகளுக்கு பதிலளிக்க சொல்லி நேரத்தை வீணடிக்கலாமா நீங்கள்?” என.
சோனியா – ராகுல் – பிரியங்கா வெளியே நடமாடும் வரை இந்தியாவில் பிரச்சினைகள் இருக்கும்.
ஆகஸ்ட் 5 – மோதி அரசின் குறிப்பிடத்தக்க நாள்.
370 நீக்கம் நடந்தது ஆகஸ்ட் 5இல். ராம் மந்திர் பூமி பூஜை நடந்தது ஆகஸ்ட் 5இல்.
டியர் மோதி -அமித்ஷா, இந்த ஆகஸ்ட் 5இலும் (பொது சிவில் சட்டம்) ஏதேனும் சிறப்பாக செய்யவும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது பதிவு ஆனந்தன் அமிர்தன்.
கடந்த சில வருடங்களாக அரசியல்/நிர்வாக ரீதியாக நான் ரொம்பப் பொங்குவதில்லை. (உள்ளூர் சில்லறைகளைத் திட்டுவதைத் தவிர) காரணம், ஒரு முறை ஒரு சீனியர் கார்யகார்த்தா கால் பண்ணி, ஏன் எப்பவும் ரத்தக் கொதிப்போட இருக்கிற மாதிரியே எழுதுற என்றார்.
ஜி, இப்பவும் மோடி ஜி, இந்த திராவிடக் கபோதிக, மிஷனரி நயவஞ்சகர்கள், பிரிவினைவாத பொறுக்கிக மேல ஆக்ஷன் எடுக்காட்டி, 2019 தேர்தல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு எப்படி வரும்? என்று ரொம்ப அக்கறையா அபத்தினேன்.
சின்னதா எரிச்சல் மற்றும் இளக்காரத்துடன் அவர் பதில் சொன்னார்.
“உனக்கு வேணும்னா அடுத்து அவர்கள் ஜெயிப்பார்களா இல்லையா என்று சந்தேகம் இருக்கலாம். அவர்கள், பாராளுமன்றத்திற்குள் நுழையும் போதே அவர்கள் கையில் அடுத்த பத்து வருடங்களுக்கான ஃப்ளோ சார்ட் (Flow chart) வச்சிருந்தாங்க”. நீ ஃபேஸ்புக்ல எழுதுறதுனால அவங்க பிளானை மாத்தப் போறதில்லை. அங்கே ரொம்ப அனுபவம் மற்றும் நிர்வாகத் திறன் வாய்ந்த டீம் இருக்கு. அவங்க வேலையை அவங்க பார்த்துப்பாங்க.
உள்ளூர்ல, தமிழ் நாட்டில் உன் எழுத்தால் ஏதாவது விழிப்புணர்வு கொடுக்க முடிந்தால் கொடு. இல்லாட்டி மூடிக்கிட்டு சுதேசி ஜாக்ரண் மஞ்ச் வேலையை மட்டும் பாருனு உச்சந்தலையில் ஓங்கி கூட்டிட்டுப் போயிட்டார்.
அன்றையிலிருந்து, மோதிஜி டீமின் அரசியல்/நிர்வாக நகர்வுகளை மட்டும் கூர்ந்து கவனித்து பாடம் போல் கற்று வருகிறேன். சில சமயம் அவர்களின் அடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு லட்சத்தீவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும்,
8-11-2016க்கு முன்னதாகத் தீர்மானிக்கப் பட்ட விஷயம் என்றால் நம்மில் பலரால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
லட்சத்தீவுகள் பிரச்சினைக்கு பணமதிப்பிழப்பு (Demonetization) தான் காரணம் என்றால் எத்தனை பேர் ஆச்சர்யப்படுவீர்கள்? நண்பர் ஒருவர் அதைப் பற்றி எழுதச் சொன்னார். எழுதுவோமா ?