எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் – பன்னீர்செல்வம் அறிவிப்பு!
அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும்...
அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதியான இன்று வெளியாகும்...
ஒரே தேசம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கான கொள்கை சீர்திருத்தங்கள், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளுடன் கூடிய ஒப்பந்த விவசாயம், ரூபாய் ஒரு லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய கனடா வர்த்தக சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மெய்நிகர் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஆன்லைன் சந்தைகள் மற்றும் திறன்மிகு வேளாண்மையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விவசாயத்துறையை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு தோமர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s கடந்த ஆறுமாத சர்வதேச பெருந்தொற்று காலத்தில் இந்திய விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் மேலும் கூறினார். வேளாண் தொழில்நுட்ப துறையில் மட்டுமே 450க்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொடங்கப்படும் ஒன்பது புது நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கனடா அரசின் வேளாண் மற்றும் விவசாய உணவுகள் அமைச்சர் திருமிகு மேரி கிளவுட் பிபு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
'புலித் திட்டம்' மற்றும் 'யானைத் திட்டம்' ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக 'சிங்கத் திட்டம்' மற்றும் 'டால்பின் திட்டம்' ஆகிய பிரத்யேக திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வன உயிர்கள் வாரத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திட்டங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவுகளை எட்டுவதற்காக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் கோரினார். அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக விளங்கிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி கொண்டாடப்படும் வன உயிர்கள் வாரம், வன உயிர்களை பாதுகாப்பதற்கும், அனைத்து உயிர்களும் இணக்கத்தோடு இணைந்து வாழ்வதற்குமான உறுதியை வலியுறுத்துவதற்கான சரியான தருணம் என்று பிரதமர் கூறினார். https://www.youtube.com/watch?v=Lo1e27nR-yQ பாதுகாக்கப்பட்ட பகுதிகள் துடிப்புடனும் அதிக அளவிலும் விளங்கும் இன்றைய காலகட்டத்தில், வன உயிர்களின் பாதுகாப்பும் முன்னெப்போதையும் விட வலிமை பெற்று இருப்பதாக அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்த திரு மோடி, வன உயிர்கள் செழிப்புடன் திகழ இத்தகைய பகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆசிய சிங்கங்களின் கடைசி மக்கள் தொகை இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டதாக கூறினார். நெகிழி கழிவு மேலாண்மைக்கு இந்தியா அளித்துவரும் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சிக்காகவும், வளமான பல்லுயிர் தன்மைக்காகவும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் பயன்பாட்டை குறைக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். இடம்பெயரும் உயிர்களின் இல்லமாக இந்தியா திகழ்வதால் இந்த உயிர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் நாடு அளித்து வருவதாக திரு மோடி கூறினார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s\ உலகின் நிலப் பரப்பளவில் 2.4% உள்ள இந்தியா, உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை தன்னகத்தே கொண்டு இருப்பதாக கூறிய திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி தேவைகள் மிகவும் அதிகமானவை என்றார். அதேசமயம் வன உயிர்கள் மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்பும் அதே அளவுக்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.---- ...
நேற்று பாஜக சார்பில் விவசாய அணியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்றார் அப்போது வேளாண்...
ஹத்ராஸ் சம்பவத்தினை வைத்து நாட்டில் மிகப்பெரும் கலவரத்தை உண்டு பண்ணிவிடம் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் திமுக போன்ற அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகிறது. இந்தியாவில் அதிகம்...
நம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆவடி குறித்து நம்மில் பலரும் சரியாக அறிந்து இருப்பது இல்லை. ஆவடி என்பது,Armored Vehicles and Ammunition Depot of India...
தமிழகத்தில் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் திமுக அடி வாங்கிய தருணத்தில் முதல் உஷாரான மீடியாக்கள் இந்தி ஏர்போர்ட் என்று தனது வேலைகளை மாற்றுப்பாதையில் துவங்கி விட்டன....
உத்தரபிரதேச தேர்தல் மாதிரியே பீகார் தேர்தலிலும் அமித்ஷாவின் சித்து விளையாட்டுகள் ஆரம்பமாகி விட்டன என்றே கூறலாம். பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை பல முனை போட்டிக்களால் சிதறடிப்பதுமூலமாக கடந்த...
முழு இந்திய எதிர்ப்பு படமாகத்தான் இருக்கும் அப்படி நக்சலைட்டுகள் சேர்ந்து "ரணசிங்கம்" என்றொரு படத்தை எடுத்திருக்கின்றன, முழுக்க முழுக்க உணர்ச்சியினை மட்டும் தூண்டி அறிவினை மழுங்கடிக்க வைக்கும்...
பீகாரில் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே எழவு விழுந்து விட்டது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக்கை மூன்று பேர் சுட்டுக் கொன்று விட்டார்கள்....
