பிரதமர் மோடி அவர்கள் புகைப்படங்கள் எடுப்பதில் மிக ஆர்வம் கொண்டவர். இயற்கை ரசிகர். என்பது அனைவருக்கும் தெரிந்தது. நாம் செல்லும் சாலையில் ஒரு மான் துள்ளிக்குதித்து ஓடுவதை பார்க்கும் போது நாம் வீடியோ எடுப்பதும் அதை பற்றி பேசுவதும் மான் ஓடும் அழகை வர்ணிப்பதுமாக இருப்போம். ஒரு மான் என்றால் நம் மனம் துள்ளி குதிக்கும். ஒரே நேரத்தில் 3000 மான்கள் துள்ளி குதித்து சாலையை கடந்தால் எவ்வாறு இருக்கும். எவ்வளவு பிரம்மிப்பாக இருக்கும்.
3000 மான்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து சாலையை கடக்கும் அந்த கண்கொள்ளா அபூர்வ காட்சி படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் தகவல் தொடர்புதுறைதான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறது
குஜராத் மாநிலம் பாவ் நகர் வேளவதார் தேசிய வனவிலங்கு பூங்காவில்தான் பிளாக்பக்ஸ் மான்கள் தாவிக்குதித்து சாலைய கடந்திருக்கின்றன. இந்த பூங்கா 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் 3 ஆயிரம் மான்கள் சாலையை கடப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
துள்ளிக்குதித்து மான்கள் சாலையை கடக்கும் அபூர்வ காட்சி வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘அற்புதம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.