ஹிந்து மக்களின் நீண்டநாள் கனவான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜை விழா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஹிந்து மதமுக்கிய தலைவர்கள் பங்குபெறுகின்றனர் .
இவர்களை தொடர்ந்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கடியார் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பில் பங்கேற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.
இதைப்போல விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அலோக் குமார், சதாசிவ் கோக்ஜே, தினேஷ் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக பாபா ராம்தேவ் கலந்து கொள்கிறார்.
பாபர் மசூதி வழக்கில் முக்கிய வக்கீல்கள் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு முதல் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அழைப்பிதழ் அட்டை, மஞ்சள் நிறத்துடன், அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும், ராம் கோயில் 161 அடி உயரமும், அதன் கட்டுமானம் சுமார் 3 முதல் 3.5 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவடையும் நிலையில், முழு கோயில் நகரமும் பிரதமர் மோடி- பா.ஜனதா கொடிகளின் சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















