தமிழ்நாட்டில் திமுக அரசு பதவிக்கு வந்த புதிதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. குறைந்திருந்த குற்றச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. காவல் துறையினைரை கொலை செய்யும் அளவிற்கு குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆடு திருட்டு தொழில் காவல்துறையினருக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கோவை போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பக்ருதீன் வயது 47, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 47 -வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் தண்டனை முடிந்து தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து சேக் பக்ருதீன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் மேலும் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளான். ஷேக் பக்ரூதின் மீது கோவை நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பக்ரூதின் நேற்று ஆட்டோவில் போத்தனூர் சாரதாமில் அருகேயுள்ள மட்டன் கடைக்கு விற்பனைக்காக ஆடு கொண்டு சென்றுள்ளார்.
சுலைமான் என்பவர் ஆட்டை பக்ரூதின் திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதை அறிந்த அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த ஆடு திருடப்பட்டது என கூறி ஷேக் பக்ருதீன் னிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது ஆத்திரத்தில் 6 பேரும் சேர்ந்து சேர்க்கை சரமாரியாக தாக்கினர் கட்டையால் அடித்து அதில் அவருக்கு மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் அவர் மயங்கி மயக்கமடைந்தார் இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள ஷேக் பக்ருதியின் மனைவி ஜீனத் நிஷாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர் சிலரது உதவியுடன் கணவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுதொடர்பாக போத்தனூர் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் வழக்கின் விசாரணையில் பக்ரூதினை தாக்கிய போத்தனூர் என். பி. டரியை சேர்ந்த சுலைமான் மகன்கள் அபுதாஹீர் 28, முகமது மஜீத் 24, மற்றும் முகமது அலி 24. அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அபுதாகிர், முகம்மது மஜித், முகம்மது அலி ஆகியோரை ஆகியோரை கைது செய்தது காவல்துறை. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.