திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. கஇவர் கலைஞர் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தா அதில் “தாழ்த்தப்பட்டோர் நீதிபதிகளாக இருப்பது, தி.மு.க போட்ட பிச்சை” என்று ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் புண்படுத்தும் வகையில் பேசினார் இதனை பல்வேறு அரசியல் கட்சியினரும் தாழ்த்தப்பட்ட அமைப்பை சார்ந்தவர்களும் கண்டித்தனர்.
ஆனால் தாழ்த்தப்பட்டோரின் காவலனை காட்டி கொண்டு பிழைப்பை ஊட்டி கொண்டிருக்கும் திருமாவளவன், இதை கண்டுகொள்ளவில்லை இந்த நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் பதிவிட்டிருந்தார் அந்த பதிவில் தாழ்த்தப்பட்டோரை வைத்து அரசியல் செய்து வரும் எம்.பி. திருமாவளவனை கிழித்து இருந்துள்ளார். கார்டூனில் சிறு பிள்ளைகள் அழுதால் வாயில் வைக்கும் நிப்பிலை வைத்தால் ஆளுகை நின்று விடும் அந்த நிப்பிளை திருமாவளவன் வாயில் வைத்து அமைதியாக இருப்பது போலும் அவர் கையில் 2021 ஆம் ஆண்டு வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ சீய் வேணும் என ஸ்டாலின் வீட்டு வாசலில் நிற்பது போல் அந்த கார்ட்டூன் அமைந்துள்ளது. அவர் பதிவிட்ட ட்விட்டரில் “அத்து மீறாதே… திருப்பி அடிக்காதே… அறிவாலயத்தில் அடங்கியிரு…” என்று பதிவு அமைந்துள்ளது
விசிக கட்சியினர் தாரக மந்திரம் “அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி” இதுதான் . இந்த நிலையில் திமுகவிடம் மண்டியிட்டுவிட்டாய் திருமாவளவன் என்பதை இந்த கார்ட்டூன் சொல்லாமல் சொல்கிறது . தாழ்த்தப்பட்ட மக்களால் அவர் தலைவராக மாறியுள்ளார். ஆனால் அவர்களை பிச்சை எடுப்பவர்கள் என கூறிய திமுகவை விமர்ச்சிக்கமால் இருப்பது, திருமாவின் தரத்தை காட்டுகிறது . அவரின் வயிற்று பிழைப்புக்காக தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்திக்கொள்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















