தினேஷ் கார்த்திக் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர். இந்திய அணிக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பல ஆட்டங்களில் போட்டியின் போக்கை மற்ற கூடியவர், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்து இந்திய அணியினை வெற்றி பெற செய்தவர். மேலும் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் விளையாடி வருகிறார்.
இவர் மைதானத்தில் இருக்கும் போது தமிழ் வீரர்கள் அஸ்வின் போன்றோரிடம் தமிழில் பேசுவது வழக்கம் இது வைரலாகும் ஊடகங்களில் தலைப்பு செய்தியகவே வரும்.த ற்போது தினேஷ் கார்த்திக் செய்த மிகப்பெரிய சம்பவம் சமூக வலைத்தளத்திலோ அல்லது ஊடகங்களிலும் பெரிதாக பேசப்படவில்லை தமிழகத்தை சார்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வர்ணனையாளராக கலந்து கொண்டார் அவரின் வர்ணனை சிறப்பாக இருப்பதால் இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தின் போது வர்ணனையாளராக தொகுத்து வழங்கினார். தற்போது இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரிலும் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.
2-வது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி பேசுகையில் னேஷ் கார்த்திக் பேசியதாவது: பேட்கள் மீதான அதிருப்தி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் இருக்கும். பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல. அவர்கள் எப்போதும் நன்றாக இருப்பது போல இருக்கும் என்றார். பேட்களைப் பற்றிய உரையாடலின்போது அடுத்த வீட்டு மனைவி பற்றிய கருத்தை நுழைத்து மோசமாகப் பேசியதற்காகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தினேஷ் கார்த்திக்கை விமர்சித்துள்ளார்கள்.