கொரோனா 2 ம் அலை நாட்டில் அதி தீவிரமாக பரவி வந்த நிலையில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை கவலைக்குள்ளாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி. 23-வயது ஆகும்போது அவர்களுக்கு PM-Cares நிதியிலிருந்து வழங்கப்படும்
18-வயது முதல் மாத நிதியுதவி வழங்கப்படும்
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி அல்லது விரும்பும் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். அனைத்து செலவுகளையும் PM-Cares ஏற்றுக்கொள்ளும்
11-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கேந்திர வித்யாலயா, சைனிக், நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளியில் பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். அல்லது அருகில் உள்ள விரும்பும் தனியார் பள்ளியில் பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். செலவுகளை PM-Cares ஏற்றுக்கொள்ளும்
பட்டமேற்படிப்பு போன்ற உயர் கல்வி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு PM-Cares கடன் வழங்கும். அதற்கான வட்டியை PM-Cares ஏற்றுக்கொள்ளும்
கல்வி உதவித்தொகை கிடைக்காத இதற பிரிவுகளை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு PM-Cares கல்வி உதவித்தொகை வழங்கும்
அனைத்து குழந்தைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 18 வயது வரை அவர்களுக்கான பிரீமியம் தொகையை PM-Cares செலுத்தும்
11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி-உறைவிட மத்திய அரசு பள்ளிகளில் குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும். குழந்தை ஒரு வேளை பாதுகாவலர் அதாவது தாத்தா பாட்டி அல்லது வேறு உறவினர்கள் பராமரிப்பில் இருந்தால் அவர்கள் வீட்டின் அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடய அனைத்து செலவையும் மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.