திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என மட்டுமே யோசித்து வருகிறது. எதை தொட்டாலும் ஊழல் நிறைந்து கடப்படுகிறது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுகவின் தலைமை குடும்பம் 30,000 கோடி சம்பாதித்து விட்டதாக திமுக அமைச்சர் பழனிவேல் ராஜனே கூறினார் என ஒரு ஆடியோ வெளிவந்தது.
திமுக தலைமையிலான ஆட்சி மீது பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரபூர்வமாக ஊழல் குற்றசாட்டுகளை மக்கள் முன் எடுத்துரைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பல முறைக்கேடு நடைபெற்று வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னரே குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ரூ.4442 கோடி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டு, பெல் நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுளதாகவும். எதற்காக ரூ.4442 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெல் நிறுவனத்திற்கு தரவில்லை என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
மேலும் 4442 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டு, இன்று, பெல் நிறுவனத்தின் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நமது பிரதமர் மோடியுடன் மேடையில் இணைந்து 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தும்/ அடிக்கல் நாட்டியும் வைத்தார். ஆனால், பின்னர் பேசிய ஸ்டாலின், பெல் (BHEL) நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு (MSME) முந்தைய காலங்களைப் போலல்லாமல் ஆர்டர்கள் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 2021 இல், எரிசக்தி துறைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, BGR எனர்ஜி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தார், சமீப காலம் வரை, அந்தப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஒப்பந்தத்திற்கான மற்றொரு ஏலதாரரான BHEL நிறுவனம், அவர்களுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படவில்லை.
BHEL தொழிற்சங்கங்கள், BGR எனர்ஜி உடனான ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக சி.பி.ஐ (CBI)
விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
பி.ஜி.ஆர் எனர்ஜி போன்ற தரம் குறைவான நிறுவனத்தை ரூ.4442 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற தி.மு.க ஆதரவு அளித்தது. இன்று பெல் நிறுவனத்தின் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இந்த நிலைக்கு தாங்கள் காரணம் என்பதை தி.மு.க இன்னும் உணரவில்லை.” இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
பி.ஜி.ஆர் எனர்ஜி குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை இது திமுகவை சற்று நிலை குலைய செய்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே இரு அமைச்சர்கள் சிறைச்சாலை வாசலில் இருக்கிறார்கள் மேலும் 11 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என அண்ணாமலை கூறி வருகிறார். பி.ஜி.ஆர் எனர்ஜி யும் சேர்ந்தால் தலைமை குடும்பத்தில் உள்ள முக்கியமானவர்கள் கம்பி எண்ண கூடும்…. இதுவே திமுகவின் பீதிக்கு காரணம்…….