திரைப்பட உலகில் நடிகர்கள் சிலர் தங்கள் நிஜ வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சில நிஜ செயல்களால் நிஜ ஹீரோக்களாகிறார்கள்.
நாம் வாழும் உலகின் மீதும் நாட்டின் மீதும் தங்களுக்கு இருக்கும் அக்கறையை சில நடிகர்கள் அவ்வப்போது காட்டிக்கொண்டுதான் இருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தெலுங்கு நடிகர் பாகுபலி படம் புகழ் பிரபாஸ் அப்படியொரு செயலை தற்போது செய்துள்ளார். அவர், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகரில் 1,650 ஏக்கர் ரிசர்வ் காடுகளை தத்தெடுத்து வளமாக்க முன்வந்துள்ளார்.
இந்தியா படங்களில் தனிப்பெரும் அடையாளம் பெற்ற ‘பாகுபலி’ புகழ் நடிகர் ஹைதராபாத்தின் புறநகரில் துண்டிகல் அருகே அவுட்டர் ரிங் சாலையில் உள்ள காசிப்பள்ளி ரிசர்வ் காடுகளை அபிவிருத்தி செய்வதற்காக வன வளர்பதற்க்காக ரூ .2 கோடி காசோலையை வழங்கினார்.
நடிகர் பிரபாஸ் மற்றும் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் அல்லோலா இந்திர கரண் ரெட்டி, மாநிலங்களவை எம்.பி. ஜோகினபள்ளி சந்தோஷ்குமார் ஆகியோர் நகர்ப்புற வன பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினர். அவர்கள் கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து ரிசர்வ் காடுகளை பார்வையிட்டனர். பின்னர் ரிசர்வ் வனப்பகுதியில் சில மரக்கன்றுகளை நட்டனர்.
காசிபள்ளி வனப்பகுதியை தத்தெடுக்க தனது நண்பர் சந்தோஷ்குமாரால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், பணியின் முன்னேற்றத்தைப் பொறுத்து மேலும் நன்கொடை அளிக்கவுள்ளதாகவும் பிரபாஸ் கூறினார்.
ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (HMDA) வரம்புகளில் கூடுதல் பசுமை மண்டலங்களை உருவாக்கி சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கும் வகையில் ரிசர்வ் காடுகளை அபிவிருத்தி செய்யுமாறு வனத்துறையை அவர் கேட்டுக்கொண்டார்.
பிரபாசின் இந்த செயல், அவரது ரசிகர்களாலும், இன்னும் பலராலும் மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது. அவரது இந்தச் செயல், அவரது ரசிகர்களின் கவனத்தையும் சுற்றுசூழல் பராமரிப்பு பக்கம் நிச்சயமாகத் திருப்பும்.
ஆனால் என்ன நடந்தாலும் தமிழகத்தில் உள்ள சில சில்லறை நடிகர்களால் நல்ல நடிகர்களின் நற்பெயரும் கெடும் நிலை இருக்கின்றது.
ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு லைக்குகள வாங்க #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்களை பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தின் தரும் தவறான முன்னுதாரணம்… #ஹிந்திதெரியாதுபோடா என தனது பிடித்த பிரபலத்தின் போட்டோவை சமூக வலைதளததில் மட்டுமல்ல தனது மனத்திலும் பகிர்ந்து பதிந்து கொள்கின்றது இளைய சமுதாயம். எனவே நமது உயிருக்கு மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்து கற்று கொள்ள வேண்டும், அது நிச்சயம் உதவும்…
ஹிந்தி எதிர்ப்பு பிரபலங்கள் தங்கள் #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் நிறைந்த டி-சர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற எதிர்ப்பு குரல்கள் தமிழ் சினிமாவில் எழத்தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அதிமுக பா.ஜ.க சார்ந்த தயாரிப்பளர்கள் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் நடிகைகளை ஓரம் கட்ட வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது. மேலும் இந்தி தெரிந்து கொண்டு இந்தி தெரியாது போடா என விளம்பரம் படுத்திய நடிகர் நடிகைகள் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். எப்போதும் சமுகத்தை பேசும் விஜய் சேதுபதி இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என ஓட்டம் பிடித்துள்ளார். சமுத்திர கனி சசிகுமார் ஆகியோரும் ஒதுங்கிவிட்டர்களாம்.