இந்தியா படங்களில் தனிப்பெரும் அடையாளம் பெற்றது ‘பாகுபலி ‘ இந்த படம் உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்திய திரைப்படம் ஆகும். இந்த படத்தினை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கினார் 2015ஆம் ஆண்டு ‘பாகுபலி: தி பிகினிங்’ முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நாயக நாயகிகள் நடித்திருந்தனர். இதன் பட்கேட் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் ஆகும்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி நடை போட்டது. படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் விரைவில் என எண்டு கார்டு போட்டார் ராஜமௌலி இரண்டாம் பாகம் எப்போது என இந்தியவே எதிர்பார்த்து கொண்டிருந்தது. படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, அனைத்து தரப்பிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியது பாகுபலி.இந்தியாவே எதிர்பார்த்த இரண்டாம் பக்கம் 2017ஆம் ஆண்டு வெளியானது ‘பாகுபலி 2’, முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெற்றியால் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ‘பாகுபலி: பிஃபோர் தி பிகினிங்’ என்ற வெப் சிரீஸ் ஒன்றை தயாரிக்க முன்வந்துள்ளது. இது ‘பாகுபலி’ கதை தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாக உருவாகவுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இத்தொடரை தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
‘பாகுபலி’ படங்களில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த சிவகாமி கதாபாத்திரத்தில் ‘இறவாக்காலம்’ ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வாமிகா நடிக்கிறார்.என்ற தகவல் வந்துள்ளது இந்நிலையில் தற்போது இத்தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அனுஸ்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கலாம்.