பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக அனைவருக்கும் தெரிந்த யாஷிகா ஆனந்த் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருடன் சென்ற நண்பர்கள் 3 மூவரில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.
யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று இரவு அவரின் சக தோழிகளுடன் மற்றும் ஆண் நண்பர்களுடன் டாடா ஹேரியர் காரில் பயணம் செய்துள்ளார்கள்.மாமல்லபுரம் அருகே கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.உடன் பயணம் செய்த யாஷிகாவின் தோழி இந்த பயங்கர விபத்தில் வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழக திரை உலகத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் இது தொடர்பாக யாஷிகா ஆனந்தின் தந்தை கூறியபோது ”நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன். யாஷிகாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நான் சென்னைக்கு விரைந்துகொண்டிக்கிறேன்” என்று சொன்னார்.
. இந்த விபத்து தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















